எந்த ஆசனத்தின் மீது அமர்ந்து தியானம், மந்திர ஜபத்தில் ஈடுபட்டால் என்ன பலன்

sivan
- Advertisement -

பொதுவாக நாம் வீட்டில் பூஜையறையில், தெய்வங்களுக்கு பூஜை செய்கின்ற பொழுது வெறும் தரையில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது என பெரியோர்கள் கூறியிருப்பார்கள். அந்த வகையில் நாம் பூஜை செய்யும் பொழுதும் சரி அல்லது இறைவனை அடைய யோகம், மந்திர ஜபம், தியானம் போன்றவற்றில் ஈடுபடும் போதும் சரி நாம் அமரும் ஆசனமாக எத்தகைய பொருட்களை பயன்படுத்தினால், என்னென்ன வகையான பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

தர்ப்பைப் புல்
தியானம் மந்திர ஜெபம் செய்பவர்களின் முதல் தேர்வாக இருப்பது தர்ப்பைப்புல் ஆசனமாகும். இந்த தர்ப்பைப் புல்லில் அமர்ந்து தொடர்ந்து தியானம், மந்திர ஜெபம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு ஞானம் சித்திக்கும். புகழ் கூடும். இல்லற வாழ்வில் இருந்துகொண்டே ஆன்மீக யோக சாதனைகளில் ஈடுபடுபவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளால் திடீர் யோகம் ஏற்படும்.

- Advertisement -

கம்பிளி
கம்பிளி என்பது பொதுவாக ஒரு சில வகை ஆடுகள், மாடுகள் மற்றும் ஒட்டகம் போன்ற விலங்குகளின் ரோமங்களை பயன்படுத்தி செய்யப்படுகின்ற ஆடையாகும். கம்பளி ஆடைகள் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க மனிதர்களால் அணிந்து கொள்ளப்படுகின்றன.
கம்பிளி ஆடை அல்லது போர்வையை ஆசனமாக விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு உடல் நல பாதிப்புகள் விரைவில் தீர வழி வகுக்கும். உடல் மற்றும் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும்.

மர ஆசனம் அல்லது மனைப்பலகை ஆசனம்
ஒரு சில வகையான மரங்கள் தெய்வீக தன்மை வாய்ந்ததாக ஆன்மீக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் “அரசு, மா, பலா, அத்தி” போன்ற தெய்வீக மரங்களின் பலகைகளை கொண்டு செய்யப்பட்ட மனைப்பலகை ஆசனத்தில் அமர்ந்து தியானம், ஜெபம் போன்ற யோக சாதனைகளில் ஈடுபடுபவர்களுக்கு செல்வம் வளம் பெருகும்.

- Advertisement -

பல்லவம்
பல்லவம் எனப்படும் ஒரு அரிய வகை மூலிகைகளால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்பவர்கள், வாழ்வில் அவர்கள் விரும்பிய அனைத்து பாக்கியங்களும் கிடைக்க பெறுவார்கள்.

கூர்மாசனம்
கூர்மாசனம் என்பது ஏதாவது ஒரு வகை தெய்வீக மரத்தின் பலகையை கூர்மம் எனப்படும் ஆமை வடிவில் செய்து, அதன் மீது அமர்ந்து யோகம், தியானம், மந்திர ஜெபம் போன்ற சாதனைகளில் ஈடுபடுபவர்களுக்கு ராஜ பதவிகள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

ரத்தினக்கம்பளம்
உயர் ரக ரத்தினங்கள் பதிக்கப்பட்டு, செய்யப்படுகின்ற ரத்தின கம்பளம் எனப்படும் ஒரு வகை ஆடையை ஆசனமாக பயன்படுத்தி தியானம், ஜபம் செய்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் கைவரப் பெறும்.

மான்தோல், புலித்தோல்
பல முனிவர்கள், ரிஷிகள் மான் தோல், புலித்தோல் போன்ற வன விலங்குகளின் தோல் மீது அமர்ந்து தியானம் செய்வது போன்ற படங்களை நாம் பார்த்திருப்போம். அக்காலத்தில் இயற்கையான முறையில் இறந்த புலி, மான் போன்ற விலங்குகளிடம் இருந்து பெற்ற தோலையே ரிஷிகளும், முனிவர்களும் ஆசனமாக பயன்படுத்தினர்

ஆனால் தற்காலத்தில் ஒரு சிலர் தங்களுக்கு பல விதமான ஆன்மீக ஆற்றல்கள் கிடைக்கும் என நம்பி மான், புலி போன்ற வன விலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாடி, அவற்றின் தோலை மாந்திரீக காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அது முற்றிலும் தவறான ஒரு செயலாகும். இயற்கையான முறையில் இறந்த மான் மற்றும் புலித்தோல் ஆசனங்களை பயன்படுத்தி யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே மீண்டும் பிறவாமை என்கிற முக்தி நிலை சித்திக்கும் என தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.

மூங்கில்
மூங்கிலால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்பவர்கள் தரித்திர நிலையை அடைவார்கள்.

பாறை கற்கள்
பாறை கற்களின் மீது அமர்ந்து தியானம், யோகம் போன்றவற்றை செய்தால் உடல் நலம் குன்றி பலவிதமான நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.

வெற்று தரை
எந்த ஒரு ஆடையோ அல்லது ஆசனத்தையோ பயன்படுத்தாமல் வெற்று மண் தரையில் அமர்ந்து யோக சாதனைகளில் ஈடுபட்டால் துன்பகரமான வாழ்க்கை வாழ நேரிடும்.

இதையும் படிக்கலாமே: நாளை புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை. பஞ்சபாத்திரத்தில் இந்த நீரை வைத்தால் உங்கள் பரம்பரையே பஞ்சமில்லாமல் வாழ்வாங்கு வாழலாம்.

மரங்களின் இலை, தழைகள்
பல வகையான மரங்களின் இலை தலைகளை பரப்பி, அதன் மீது அமர்ந்து யோகம், மந்திரஜபம், போன்றவற்றை செய்பவர்களுக்கு மனசஞ்சலம் அதிகரிக்கும்.

- Advertisement -