நீங்கள் உச்சரிக்கும் எந்த ஒரு மந்திரமும் உடனே பலிக்கும். மந்திரத்திற்கான பலனை கைமேல் முழுமையாக பெற, இந்த 1 வார்த்தையை மந்திரத்தோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

oom-manthiram
- Advertisement -

பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் முடிய வேண்டும் என்று நினைத்துதான் தொடங்குவோம். சில சமயங்களில் அது தோல்வியும் அடையலாம். ஒருவர் வெற்றியை அடைவதும், தோல்வியை தழுவுவதும் அவரவர் கர்ம வினைகளை பொருத்தது. இருப்பினும், சில விஷயங்களைச் சாதிப்பதற்கு நாம் உச்சரிக்கக் கூடிய மந்திரங்கள் நமக்கு துணைபுரிவது உண்டு. ஏனென்றால் கர்மவினைகளை குறைக்கக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

om pranava manthiram

நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதற்காக உச்சரிக்கக் கூடிய மந்திரம் நீண்ட நாட்களாக உங்களுக்கு பலன் தரவில்லையா? உங்களுக்கான பதிவு தான். மந்திரத்தை எந்த நேரத்தில் உச்சரிக்க வேண்டும். எப்படி உச்சரிக்க வேண்டும். எந்த வார்த்தையை சேர்த்து உச்சரிக்க வேண்டும், என்ற சூட்சும ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பொதுவாகவே பிரம்ம முகூர்த்த நேரத்தில் மந்திரத்தை உச்சரித்தால் அந்த மந்திரம் சீக்கிரமே நமக்கு சித்தியாகும் என்று சொல்லுவார்கள். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் உச்சரிக்கலாம்.

om manthiram

இதையும் தாண்டி வள்ளலார் அவர்கள் நமக்கு சொல்லி வைத்திருக்கும் நேரம் தான், அமிர்த யோக நேரம். இந்த அமிர்த நேரம் அதிகாலை 3.00 மணியை குறிக்கின்றது. இந்த நேரத்தில் காற்றை நன்றாக சுவாசித்த படி, நம் உச்சரிக்கக் கூடிய எந்த மந்திரமாக இருந்தாலும் அது நமக்கு உடனே சித்தியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நீங்கள் உச்சரிக்கக் கூடிய மந்திரத்தை தொடங்கும்போது ‘ஸ்ரீ’ என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உச்சரிக்கக் கூடிய மந்திரத்தின் மூலம், அதிகப்படியான பலனை அடைய இந்த வார்த்தை உங்களுக்கு உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை தினம்தோறும் நீங்கள் 1008 முறையோ 108 முறையோ உச்சரிக்கும் பழக்கம் இருக்கலாம்.

manthiram

‘ஓம் ஸ்ரீ நமச்சிவாய’ என்று முதல் முறை தொடங்கும் போது மட்டும் ஸ்ரீ யை சேர்த்துக் கொண்டால் போதும். மற்றபடி அடுத்தடுத்து வெறும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களுக்கு புரிந்தது அல்லவா? ஸ்ரீ போட்டு தொடங்கும் எந்த ஒரு செயலும் தோல்வி அடைந்ததே கிடையாது. அபாரமான வெற்றியை தரும் சக்தி இந்த ‘ஸ்ரீ’ என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கியுள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

shivan

இப்படியாக பிரம்ம முகூர்த்த நேரத்தில், அமிர்த முகூர்த்த நேரத்திலோ அல்லது மற்ற நேரத்திலோ நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் போது, மேல் சொல்லப்பட்ட குறிப்புகள் எல்லாவற்றையும் விட, உங்களுடைய மன உறுதியும் நம்பிக்கையும் அவசியம் தேவை என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – விருச்சிகம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -