இன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா ?

767
vinayagar
- விளம்பரம் -

பொதுவாக நாம் இறைவனை வணங்கும்போது அவரை போற்றும்படியான மந்திரங்களையும், நம் குறைகள் அனைத்தையும் அவர் தீர்க்க வேண்டும் என்ற பிராத்தனைக்குரிய மந்திரங்களையும் நாம் ஜபிப்பது வழக்கம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வீட்டில் பூஜை செய்யும்போது எந்தெந்த மந்திரங்களை கூறுவது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.

pillayar

ஸ்லோகம்
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

- Advertisement -

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

kaliman pillayar

விநாயகர் சகஸ்ரநாமம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

ஸ்லோகம்:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

ஸ்லோகம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

pillayar

ஸ்லோகம்:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

இந்த மதிரங்களையும் ஸ்லோகங்களையும் இன்று கூறி விநாயகரை வழிபடுவதால் நல்ல பலன்கள் உண்டு.

 

Advertisement