பணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்

vinayagar-1

பலரது வீட்டில் செல்வம் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைக்கச்செய்யும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ.

pillayar

கணபதி மந்திரம்:

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் 
ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம் 
நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட 
சித்திம்மே தேஹி சரணாகத வத்லை 
பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா 
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால் மகா கணபதி நம்மை செல்வ செழிப்போடு வாழ வைப்பார். அதோடு கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்தால் எப்பேர் பட்ட கடனும் தீர வழி பிறக்கும்.

பணம் குறித்த பொதுவான விளக்கம்

இந்த உலகம் உயர்வு பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த அளவுக்கு உழைக்க வேண்டும். அப்படி கடுமையான உழைப்பில் ஈட்டிய செல்வமே சிறந்த செல்வம் என்பது ஆன்றோர்களின் கருத்தாகும். “தனக்கு கிடைக்கிற பணத்தை முறையாக செலவு செய்ய தெரியாதவன், சிறந்த மனிதனாக இருக்க முடியாது” என பகவான் “ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ கூறுவார். அப்படி பார்க்கும் போது பணமும் இறைவனின் தன்மை கொண்டது என ஏற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

money

முற்காலத்தில் இந்த உலகில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த, தாங்கள் உருவாக்கிய பொருட்களை வேறொரு நாட்டினரிடம் கொடுத்து, அதற்கு பதிலாக அவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை பண்ட மாற்று செய்து கொண்டனர். ஆனால் காலம் செல்ல செல்ல உலகின் பொருளாதார முறையே வேறு வகையில் மாறி விட்டது. இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதே பலருக்கும் கடினமான ஒரு காரியமாக இருக்கிறது. எனவே இம்மந்திரத்தை முறைப்படி ஜெபித்து வணங்குவதால் புதிய வகையில் வருவாய் மற்றும் உங்களிடம் பணத்தின் சேர்க்கையும் உயரும் சூழ்நிலை உருவாகும்.

இதையும் படிக்கலாமே:
சிறப்பான மனைவி அமைவதற்கான மந்திரம்

English Overview:
Here we have Ganapati mantra in Tamil. It is also called as Ganapathi manthiram in Tamil. This mantra needs to be chanted 108 times daily and we need to do Ganapathy Homam to get away from loan problems.