எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்

murugan-8

மனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. கீழே உள்ள மந்திரத்தை கூறி இறைவனை வழிபடுவதன் மூலமாக அவர் ஓடோடி வந்து நம் துன்பங்களை போக்குவார்.

krishna

மந்திரம்:

துஸ்ஸபாயாம் மஹா கஷ்டாத்
த்ரௌபதி மோசி தாத்வயா
தேஹிமே விபுலம் ஸௌக்யம்
கஷ்டான் மோசய மோசய
நமஸ்தே வாஸுதேவாய ஹரயே பரமாத்னே
ப்ரணதக்லேச நாசாய கோவிந்தாய நமோ நமஹ.

மகாபாரதத்தில் துரௌபதியின் துகிலை துட்சாதனன் உருவ முற்பட்டபோது அந்த சபையில், பலம் மிக்க பலரும், ஆன்றோர்களும் இருந்தபோதும் அவளின் மானத்தை காத்து கண்ணீரை துடைக்க ஆளில்லை. ஆனால் பகவான் கிருஷ்ணர் தான் அவளை அன்று காத்தருளினார். அதுபோல நம்மை சுத்தி எத்தகைய மாமனிதர்கள் இருந்தாலும், இறைவன் ஒருவனாலேயே நம் துயரத்தை நீங்க முடியும்.

இதையும் படிக்கலாமே:
ராஜ யோகம் அருளும் அற்புதம் தமிழ் ஸ்லோகம்

மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையும் மாலையும் கூறி வருவதன் மூலமாக நம் துன்பங்கள் அனைத்தும் விலகி இன்பம் பெருகும் என்பது நிச்சயம்.