தினமும் குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லி விட்டு தண்ணீரை ஊற்றுங்கள்! பாவத்தை போக்கக்கூடிய கங்கையில், நீராடிய பலன் கிடைக்கும்.

bathing-mantra
- Advertisement -

ஒவ்வொருவரும் தங்களுடைய கர்ம வினைகளை அனுபவித்துக் கொண்டு தான் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். மனிதன் தான் அனுபவிக்கக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தால் பாவம் செய்ய துணிய மட்டானோ! என்னவோ! பிரதிபலன் பார்க்காது செய்யும் புண்ணியம் தான் கணக்கில் எழுதப்படுகிறது. அதே போல தான் எதுவும் முன்னரே தெரியாமல் ஒழுக்க நெறி தவறாமல் வாழ்ந்து காட்டுபவர்களுக்கு நான் மோட்சமும் கிடைக்கிறது.

chitraguptan

இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் மனிதன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவத்தைப் போக்கக்கூடிய கங்கையின் புனித பலனை தினம் தினம் நாம் அனுபவிக்க இந்த மந்திரம் உச்சரித்தால் போதுமே! அதை எப்படி உச்சரிக்க வேண்டும்? எப்போது உச்சரிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

- Advertisement -

நதிகளில் கங்கை ஆனவள் சிறப்பாக போற்றி பாடப்படுவதற்கு காரணம் அவள் மிகவும் விசேஷமானவள் என்பதால் தான். எத்தகைய பாவத்தையும் கங்கையில் நீராடினால் போக்கிக் கொள்ளலாம் என்பது ஐதீகம். அதனால் பல்லாயிரம் வருட கணக்கில் அனைத்து ஜீவராசிகளும் செய்த பாவத்தை தன்னுள்ளே தான் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு புண்ணிய பலனை அருளும் கங்கையும் நமக்கு ஒரு தாய் தான் என்றால் அது மிகையாகாது. அத்தகைய கங்கை தாயை போற்றிப் பாட கூடிய மந்திரம் தான் இந்த மந்திரம்.

river ganga

மந்திரம்:
ஓம் நம சிவாயை நாராயண்யை தச தோஷஹராயை கங்காயை சுவாஹா!

- Advertisement -

சிவபெருமானுடைய ஜடாமுடியில் வாசம் செய்து கொண்டு இருப்பவளே! அதே போல் நாராயணரின் பாதத்தையும் நீராடிக் கொண்டிருப்பவளே! அனைவரின் பாவங்களையும் போக்க கூடிய புண்ணியவளே! கங்கை தாயே! உம்மை வணங்குகிறோம்!! என்பது தான் இம்மந்திரத்தின் அர்த்தம் ஆகும்.

ganga

கங்கைக்கு சென்று நீராடினால் தான் கங்கையின் பலன் நமக்குக் கிடைக்கும் என்பது அல்ல. வீட்டிலேயே தினம் தோறும் நாம் குளிக்கும் பொழுது உடம்பில் தண்ணீரை ஊற்றி கொள்ளும் முன் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர் குளித்து விட்டு வந்தால் கங்கையில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

bathing

எல்லோராலும் கங்கைக்கு சென்று நீராட முடியாது. அதுவும் தினமும் கங்கைக்கு சென்று நீராடுவது என்பது சாத்தியமல்ல. ஆனால் கங்கையை போற்றி பாடுவதன் மூலம் அந்த பலனை நம்மால் அனுபவிக்க முடியும் என்றால் அது எவ்வளவு சிறப்பிற்குரியது? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

krishna

சந்தர்ப்பமும், சூழ்நிலையும் நமக்கு சாதகமாக இருந்தாலும் நம்மால் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் நேர்மையுடன் வாழ முடிந்தால் அதுவே உண்மையில் புண்ணியத்தை சேர்க்கும். சூழ்நிலை தான் எந்த ஒரு விஷயத்தையும் தீர்மானிக்கிறது. சூழ்நிலை காரணமாக தவறு செய்பவர்களை விட, எத்தகைய சூழ்நிலையிலும் தன்னிலை மாறாமல் தர்மத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு இறுதியில் வெற்றி கிடைக்கும் என்று புராணங்கள் மூலமாக நம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது.

mantra-signature

இவைகள் நமக்கு தெரிந்திருந்தாலும் பலரும் கட்டுப்பாடு இல்லாமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அற்பமாக நடந்து கொண்டு தான் இருக்கிறோம். அதனை சரி செய்து கொள்ள இந்த மந்திரம் உதவி புரியும். தினம் தினம் கங்கையின் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் தன்னை அறியாமலேயே தர்மத்தின் பக்கம் சென்று விடுகின்றனர். நாமும் முயற்சி செய்து தான் பார்க்கலாமே!

இதையும் படிக்கலாமே
தொட்டதெல்லாம் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -