தொட்டதெல்லாம் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது.

shivan1

நம்பிக்கையோடு ஒரு சிறிய கல்லைப் பார்த்து, அதை கடவுளாக பாவித்து, உண்மையான பக்தியோடு வணங்கி வழிபாடு செய்தால் அந்த கல்லும் கடவுளின் சிலையாக மாறும் என்பதுதான் நம்பிக்கை. அதேபோல் ஒரு தம்ளர் தண்ணீரை நம்பிக்கையோடு நாம் பருகுவதன் மூலம் நம் உடல் சுறுசுறுப்பாகும். இந்த உலகம் உங்கள் வசப்படும். தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் என்ற எண்ணத்தோடு அந்த தண்ணீரை பருகினால் அந்த தண்ணீரும் அமிர்தமாகும் என்பதும் நம்பிக்கை. எந்த ஒரு பரிகாரங்களும் பலன் அளிப்பதும், பலனளிக்காதிருப்பதும் அவரவர் நம்பிக்கையில்தான் உள்ளது. அந்த வரிசையில் இன்று, சுலபமான ஒரு தண்ணீர் பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

praying-god-9

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த தீர்த்தத்தை பருகும் பட்சத்தில் உங்களுக்கு இந்த உலகமே வசமாகும் என்ற எண்ணம் ஆழ் மனதில் தோன்ற வேண்டும். நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் விதைக்கப்பட வேண்டும். அதன் பின்பு இந்தத் தண்ணீரை பழகியவர்களுக்கு,  தொட்டதெல்லாம் நிச்சயம் வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

உங்களுடைய வீட்டில் வெள்ளி டம்ளர் இருந்தால் இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லை என்றால் ஒரு கண்ணாடி டம்ளரை புதியதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சில்வர் டம்ப்ளரை பயன்படுத்துவதை விட கண்ணாடி டம்ளரை பயன்படுத்துவது கொஞ்சம் சிறப்பானது. பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, ஒரு டம்ளர் அளவு சுத்தமான தண்ணீரை இறைவனின் முன்பாக வைத்து, விநாயகரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

water

நீங்கள் செய்யப்போகும் இந்த பரிகாரம் முழுமையான பலனைப் பெற வேண்டும் என்றால் முதலில் தடைகளைத் தகர்க்கும் விநாயகரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஒரே ஒரு வில்வ இலை, ஒரே ஒரு துளசி இலை, ஒரே ஒரு அருகம்புல் கிடைத்தால்கூட போதும். அதை இந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். உங்களது உள்ளங்கைகளை, வலது உள்ளங்கையை தண்ணீரின் மேல் பக்கத்தில் வைத்து மூடி ‘சகல சம்பத்தும் சர்வ ஜன வசிய சிவாய ஸ்வாஹா’ என்று 3 முறை உச்சரித்து விட்டு அந்த தண்ணீரை குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி குடித்துவிடுங்கள்.

- Advertisement -

அதிலிருக்கும் அருகம்புல் வில்வ இலை துளசியை சேர்த்து சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆன்மிக ரீதியாகவும் பல வகையான நன்மையை நமக்கு கொடுக்கும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த தண்ணீரை பருகி வருபவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதை உணர முடியும். 48 நாட்கள் கழித்து உங்களுக்கே உள்ளுணர்வு, உங்களை தூண்டிவிட தொடங்கிவிடும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகம், புத்துணர்ச்சி தானாகவே வந்துவிடும்.

thulasi

அவ்வளவு தான். பின்பு உங்களது தினசரி வேலையை தொடங்கலாம்.  சுலபமான தாந்திரீக பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு ஊன்றுகோலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 2 செடிகள் வீட்டில் இருந்தால் இதை செய்ய மறந்து விடாதீர்கள்! அதிர்ஷ்டம் வர இப்படி செய்யலாமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.