நீங்கள் இழந்த செல்வத்தை மீட்டு எடுக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

lakshmi

ஒரு மனிதன் இந்த உலகத்தில் பணக்காரனாகவே பிறந்து, பணக்காரனாகவே வாழ்ந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நன்றாக வாழ்ந்தவன் இடைக்காலத்தில் தன் செல்வங்களை எல்லாம் இழந்து வறுமையில் வாடினால், இந்த ஊர் அவனை எவ்வளவு ஏளனமாகப் பார்க்கும் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஏளனம் என்பது ஒரு பக்கம் இருக்க அனைவரும் அவனுக்காக பரிதாபப்படுவதை கூட அவனால் தாங்கிக்கொள்ள முடியாது.

mahalakshmi

ஒரு மனிதனுக்கு இப்படிப்பட்ட கஷ்டமானது ஏன் வருகிறது என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அவனது சிந்தனையும், பழக்கவழக்கமும், வார்த்தையும் அடுத்தவர்களை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.  சில சமயங்களில் நம் பேசப்படும் வார்த்தைகளானது நம்மையே தாக்கிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் யாவும் நேர்மறை ஆற்றலை உருவாக்குவது போல தான் இருக்க வேண்டும். கெட்ட வார்த்தைகளை நாம் உபயோகிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம். ஏனென்றால் நாம் பேசும் வார்த்தைகளை தேவதைகள் கேட்டுக் கொண்டே இருப்பார்களாம். கேட்பது மட்டுமல்ல, அவர்கள் சிலசமயங்களில் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வாதத்தையும் கொடுப்பார்கள். தேவதைகள் அப்படி சொல்லும் சமயத்தில் நாம் ஏதாவது ஒரு கெட்ட வார்த்தையை பேசி விட்டால் அந்த கெட்டது நமக்கு அப்படியே நடந்துவிடும் என்பது உண்மையான ஒன்று. இதனால் நாம் அனைவரும் பேசும் வார்த்தைகளை கவனத்துடன் பேசுவது நல்லது.

சிலருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் வந்து விட்டால், மற்றவர்களின் கண்திருஷ்டியே அவர்களை படாதபாடு படுத்தி எடுத்துவிடும். எது எப்படியாக இருந்தாலும் நீங்கள் வைத்திருந்த செல்வத்தை இழந்தவர்களாக இருந்தால் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மீண்டும் இழந்த செல்வங்களை மீட்டெடுக்க முடியும். உங்களுக்கான மந்திரம் இதோ..

vishnu

ஹிரண்ய வர்ண ரூபா

- Advertisement -

பெருமாளையும், மகாஹாலஷ்மியையும் மனதில் சதாகாலமும் நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை எப்பொழுதும் உங்கள் ஆழ் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது தங்க ஸ்வரூபமான அந்த மஹாலக்ஷ்மியின் ஆசியை முழுமையாகப் பெற்று நீங்கள் இழந்த செல்வத்தை விட அதிக செல்வத்தை அடையும் பாக்கியமானது உங்களுக்கு கிடைத்துவிடும். ஆனால் உங்களது முயற்சிகளை நம்பிக்கையோடும், விடாமுயற்சியுடனும் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே
சௌந்தர்ய லஹரி பலன்கள்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ilantha selvam pera lakshmi mantra in Tamil. Ilantha selvam metka in Tamil. Ilantha selvam pera manthiram. Ilantha sothai metka mantra.