மூக்குக்கு மேல் கோபம் வருபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் கோபம் குறைந்து அதிசயம் நடக்கும் தெரியுமா?

anger-amman

சிலருக்கு தேவையில்லாமல் அடிக்கடி கோபம் வரும். சாதாரணமாக யாராவது எதையாவது பேசி விட்டால் கூட உடனே வீடே இரண்டாகும்படி கோபம் வந்து விடும். இவர்களுடைய கோபத்தால் பலரும் பலமுறை அவதிப்பட நேர்ந்திருக்கலாம். தன்னுடைய கோபம் நியாயம் இல்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் அந்த கோபத்தை கட்டுபடுத்த தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கலாம். அடிக்கடி கோபம் கொள்பவர்கள் அவர்களுடைய ஆயுளையும் சேர்த்து குறைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் உண்மை.

angry-men

கோபம் கொள்வதால் நிறைய தீமைகள் உடலில் உண்டாகும். இதனுடன் மற்றவர்களுடைய மனதை புண்படுத்தியதால் உண்டாகும் மன உளைச்சலும் சேர்ந்து இறுதியில் நீங்கள் தான் கஷ்டப்பட்டு கொண்டிருப்பீர்கள். உங்களின் இந்த கோபத்தை குறைக்கவும், நிதானத்தை வரவழைக்கவும் இந்த மந்திரங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் வடகிழக்கு திசையாகிய ஈசானிய மூலையை ஆதிக்கம் செலுத்துபவளும், அம்பாளின் தோளிலிருந்து உதித்தவளும் ஆன ஈஸ்வரி என்பவள் தான். இவளின் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு கோபம் குறைந்து நிதானம் உண்டாகும் என்பது நியதி. மகேஸ்வரி காயத்ரி மந்திரம் 108 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். இதனை வீட்டின் வடகிழக்கு திசையைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு உச்சரித்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய கோபமான குணம் மாறும்.

mageshwari

இதோ உங்களுக்கான மஹேஸ்வரி மந்திரம்:
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே!
சூல ஹஸ்தாயை தீமஹி!
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.

- Advertisement -

அது போல் நான் என்னும் அகந்தை அழிய கீழ்வரும் இந்த அங்காள பரமேஸ்வரி பாடலை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நான் தான் எல்லாம்! என்று சிலருக்கு ஒரு நினைப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆணவமும், அகம்பாவமும் உச்சிக்கு ஏறி, தான் தான் எல்லாம்! தனக்குத்தான் எல்லாம் தெரியும்! என்ற எண்ணங்கள் மேலோங்கும். இப்படிப்பட்டவர்கள் சீக்கிரமே அழுது வடியும் சூழ்நிலை உருவாகும் என்பதை உணராதவர்கள் என்று தான் கூற வேண்டும்.

award-success

எவ்வளவு பெரிய பேரும், புகழும் கிடைத்தாலும் தலைகணம் கொள்ளாமல் யாரால் சாதாரணமாக இருக்க முடிகிறதோ அவர்களுக்கே வெற்றி எப்போதும் நிரந்தரமாக இருக்கும். அகம்பாவம் கொண்டவர்களிடம் வெற்றி எனும் தேவதை நிலைப்பது இல்லை. இது போன்றவர்கள் இந்த அந்தாதி பாடல் தினமும் பாராயணம் செய்தால் மிகப்பெரிய வெற்றியையும் தன்வசம் ஆக்கிக் கொள்ளலாம்.

kali amman

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதிப் பாடல்:
தான் தோன்றி தரணியில் தந்திடும் நின் புகழ் முன்பே
வான் தோன்றி வருமுன்னை வந்தம்மா நின் புகழ் பாட
யான் தோன்றி என்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும் நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே!

இதையும் படிக்கலாமே
எதிர்காலம் அமோகமாக அமையவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் இந்த 4 வரிகளை படித்தால் போதுமே!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.