அனைத்திலும் வெற்றி பெற உதவும் காரிய சித்தி சுலோகம்

0
2101

சில நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் நாம் நினைத்தது போல நிறைவேறுவது கிடையாது. இன்னும் சிலரால் தாங்கள் நினைத்த வேலைகளை தொடங்கவே முடியாது. இதற்கு காரணம் ஜாதக தோஷமாக கூட இருக்கலாம். நமக்கு எவ்வித தோஷம் இருந்தாலும் அதை போக்கி நமது வேலைகளை சிறப்பாக்க முடிக்க உதவும் ஒரு அற்புதமான அனுமன் மந்திரம் உள்ளது.

oom symbol

மந்திரம்:

அசாத்ய சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெரும். அதோடு நாம் முன்பு செய்த காரியங்கள் ஏதேனும் தடைபட்டு இருந்தால் செவ்வாய் கிழமைகளில் அனுமன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து மேலே உள்ள மந்திரத்தை 27 முறை கூறுவதன் பயனாக தடைபட்ட காரியம் விரைவில் முடியும்.

இதையும் படிக்கலாமே:
வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் மழை பொழியும் அதிசய மரம்

மந்திரத்தை ஜெபிக்கும் நாள் அன்று நிச்சயம் அசைவம் சாப்பிட்டிருக்க கூடாது. உடலளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் மந்திரம் பலன் தராது.