- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமரண பயம் நீக்கும் பிரதோஷ மந்திரம்

மரண பயம் நீக்கும் பிரதோஷ மந்திரம்

- Advertisement -

இந்த கலியுகத்தில் ஒரு மனிதனுடைய மரணம் நிர்ணயிக்கப்படாத ஒன்று. யாருக்கு எந்த நேரத்தில் ஆபத்து வரும் என்று சொல்லவே முடியவில்லை. இந்த யுகத்தில் மனிதர்களுடைய புத்தி வேகத்தோடு மட்டும் தான் செயல்படுகிறதே தவிர, அந்த புத்தியில் விவேகம் என்பது இல்லை. வேகத்தோடு எடுக்கும் முடிவுகள் நமக்கு சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை உண்டு பண்ணி விடுகிறது.

எதிர்பாராத மரணம், எதிர்பாராத எம பயம், எதிர்பாராத வாழ்க்கை பயம், எல்லாம் நம்மை துரத்தி துரத்தி அடிக்கிறது. இந்த கலியுகத்தில், இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால், ஈசனை வழிபாடு செய்வது மட்டும்தான் ஒரே ஒரு வழி. கண்கண்ட தெய்வமான அந்த ஈசனை பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் வழிபட நமக்கு இருக்கும் தேவையற்ற மன பயம் விலகும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஈசனது இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து பாருங்கள். மரண பயம் உங்களை துரத்தாது. எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படாது. எதிர்பாராத உடல் உபாதைகள் நோய் நொடிகளால் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. இத்தனை சக்திகளை கொண்ட அந்த மந்திரம் என்ன. பிரதோஷ நேரத்தில் அந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

மரண பயம் நீக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய
சம்பவே அமிருதேசாய சர்வேசாய
மஹாதேவாய நம

- Advertisement -

மரணத்தை வென்று வந்த ருத்ர மூர்த்தியே, ஆலகால விஷத்தை அருந்தியும் மரணத்தை வென்றவரே, அமிர்தமானவரே, சர்வமும் சகலமும் நீயே, மகாதேவா உன்னை வணங்குகின்றேன். இதுதான் இந்த மந்திரத்திற்கு உண்டான அர்த்தம்.

மரண பயத்தை போக்கக்கூடிய சிவ மந்திரம் இதுதான். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் இன்றைய தினம் இதை உங்களுக்காக நினைவு கூர்ந்ததில் சந்தோஷம். இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். இந்த நேரத்தில் உங்கள் கையில் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு, ஏற்றி வைத்திருக்கும் விளக்குக்கு முன்பு அமர்ந்து, இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலும், உங்கள் வாழ்வில் இருக்கும் மரண பயம் நீங்கும். செய்த பாவங்களுக்கு உண்டான தண்டனை குறையும். நீங்கள் கோவிலுக்கு சென்று ஈசனை வழிபாடு செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் சரி, ஒரு வில்வ இலையை கையில் வைத்துக்கொண்டு, கோவிலிலேயே ஏதாவது ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் தவறு கிடையாது.

கோவிலில் இந்த மந்திரத்தை சொல்லும் போது பலன் உங்களுக்கு அபரிவிதமாக கிடைக்கும். மந்திரத்தை 108 முறை உச்சரிக்க முடியாதவர்கள், வெறும் 27 முறை மந்திரத்தை உச்சரித்தாலும் தவறு கிடையாது. கணக்கே பார்க்காமல் இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. கையில் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்லி பிறகு இந்த வில்வ இலைகளை உங்களுடனே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது பெயர்ச்சி 2025 பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்.

ஒரு மாதம் வரை இந்த வில்வ இலைகள் உங்கள் பாக்கெட்டிலோ பர்ஸிலோ இருக்கலாம். இந்த இலைகள் வாடி போனாலும் இதற்கு இருக்கும் மகத்துவங்கள் நீங்காது. தேவையற்ற மன குழப்பமான பயத்தில் இருப்பவர்கள், இன்று இந்த வழிபாட்டை, இந்த மந்திரத்தையும் தவறாமல் சொங பாருங்கள். உங்கள் வாழ்நாளில் நல்ல மாற்றங்கள் தெரியும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்