மரண கிணற்றுக்குள் கார், பைக் ஓட்டும் அறிய காட்சி – வீடியோ

Marana Kinaru

நம்ப ஊர் கோவில் திருவிழாக்களில் பல விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் உடுமலைப்பேட்டை மாரி அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற மரண கிணறு சாகச விளையாட்டானது பார்ப்பவர்களை மிலளவைக்கும் வகையில் இருந்தது. அந்த விளையாட்டில் வீர்கள் செய்த சாகசத்தின் காட்சிகள் இதோ.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

மரண கிரணு சாகச விளையாட்டு என்பது இப்போது பெரும் அளவில் குறைந்துள்ளது என்றே கூறலாம். திருவிழா காலங்கள் மற்றும் கண்காட்சி போன்றவை நடைபெறும் சமயங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் இது நடைபெற்று வருகிறது. உயிரை பணயம் வைத்து நடைபெறும் இந்த சாகச விளையாட்டை காண மக்கள் பெரும் திரளாக வருவது வழக்கம்.

20 முதல் 40 அடி உயரம் கொண்ட மரண கிணறானது மரசட்டங்களால் செய்யப்படுபவை. இதன் அகலம் 30 அடி வரை இருக்கும். இதில் கார், பைக் என பல வாகனங்களை ஒரே சமயத்தில் ஓட்டி வீரர்கள் அசத்துவது வழக்கம். இதை காணும் ஒவ்வொருவருக்கும் அந்த வீரர்களுக்கு எதுவும் ஆகிவிட கூடாது கடவுளே என்ற எண்ணம் வரும் அளவிற்கு அந்த வாகனங்களின் வேகம் இருக்கும்.

மரண கிணறு சாகச போட்டியில் சில நேரங்களில் சில விபத்துக்களும் ஏற்பட தான் செய்கின்றன. அப்படி விபத்து நேருகையில் ஒருவர் செய்யும் சிறு தவறால் பலருக்கும் பேராபத்து ஏற்படுகிறது. அதனாலேயே இது போன்ற போட்டிகள் இப்போது பெருமளவு குறைந்து வருகின்றன.