- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமரணத்தில் கூட ஒருவருக்கு துன்பம் வரக்கூடாது என்றால் எப்போதும் இந்த புகைப்படத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

மரணத்தில் கூட ஒருவருக்கு துன்பம் வரக்கூடாது என்றால் எப்போதும் இந்த புகைப்படத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மரணம் அடைந்த பிறகு ஒரு மனிதனுக்கு கஷ்டமில்லை. ஆனால், மரணத்திற்கு முன்னால் அவன் எதிர் கொள்ளக்கூடிய கஷ்டங்கள் ஏராளம். மரணத்தை நெருங்கும் போது அவன் படும் கஷ்டம் ஏராளம். அதுவும் இந்த கலியுகத்தில் ஒரு மனிதனுக்கு இறப்பு என்பது எந்த ரூபத்தில் எப்போது வருகின்றது என்று தெரியாது. திடீரென்று விபத்து. சொல்ல முடியாத அளவுக்கு காயங்கள் பட்டு உயிரை விடும் சூழ்நிலை. உடல்நிலை சரியில்லாமல் உயிரை விடும் சூழ்நிலை. நம்மை சுற்றி நம்முடைய சொந்த பந்தங்கள் இல்லாமல் உயிரை விட்டு, அனாதையாக கிடைக்கின்றோம். இன்னும் கொஞ்சம் சொல்லப்போனால் ஒரு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கூட உரியவர்களிடம் ஒப்படைக்காமல் அவர்களுடைய இறுதி முகத்தை கூட பார்க்காமல் இறந்த சூழ்நிலை.

எந்த சூழ்நிலையிலும் மரணம் சம்பவிக்கும் போது, நாம் எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது. நம்முடைய மரணம் கூட நமக்கு சுகத்தை தர வேண்டும். அந்த சமயத்தில் கூட நமக்கு இன்னல்கள் வரக்கூடாது என்றால் எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். எந்த கடவுளின் புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.

- Advertisement -

மரணத்திலும் கஷ்டம் வராமல் இருக்க:
குறிப்பாக நீங்கள் அடிக்கடி வெளியூருக்கு செல்பவர்கள், வண்டி ஓட்டிக்கொண்டே இருப்பவர்கள் எனும் பட்சத்தில் உங்களுக்கு இது ரொம்ப ரொம்ப கை கொடுக்கும் பரிகாரமாக இருக்கும். ஒருவருடைய உயிருக்கு  பெரிய அளவில் திடீரென எந்த ஆபத்து வரக்கூடாது என்றால் நீங்கள் உங்களுடைய பக்கத்திலேயே பைரவரின் திருவுருவப்படத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் இஷ்டம் தான் பைரவர் எத்தனையோ வடிவத்தில் காட்சி தருகின்றார். உங்களுக்கு எந்த ரூபம் பிடித்திருக்கின்றதோ அதை சின்ன சைஸில் வாங்கி பேக்கட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பர்ஸிலும் வைத்துக் கொள்ளலாம் பெண்களும் பைரவரின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளலாம். ஆண்களும் பைரவரின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளலாம். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் பையில் கூட சின்ன அளவில் ஒரு பைரவர் புகைப்படத்தை வாங்கி வைத்தால் அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கும்.

- Advertisement -

சிவபெருமானின் 66 அவதாரங்களில், இந்த கால பைரவரும் ஒருவர். காலத்தால் எந்த ஒரு ஆபத்தும் நம்மை கலங்கடிக்காது. காலத்தின் கடவுள் இவர்தான். ஆணவத்தையும், அகங்காரத்தையும் அழிப்பதற்காக சிவபெருமான் காலபைரவர், அவதாரத்தை எடுத்த நாள் தான் காலபைரவ அஷ்டமி என சொல்லப்படுகின்றது. 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் இவருக்குள் அடக்கம்.

இதையும் படிக்கலாமே: பணத்தை எப்போதும் இப்படி வைத்தால் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்ல க்கூடிய சூழ்நிலை வரவே வராது. பணம் எப்போதும் கையில் புழங்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய தாந்த்ரீக வழி.

இந்த உலகத்தில் நீங்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றால் உங்களை பாதுகாக்க கூடிய வேலையை இந்த பைரவரால் மட்டும்தான் செய்ய முடியும் என்று நம்புங்கள். இது அல்லாமல் உங்களால் எப்போதெல்லாம் முடிகின்றதோ அப்போதெல்லாம் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு, இந்த பைரவரையும் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். பைரவா பைரவா என்று மனதில் நினைத்துக் கொண்டால் மன பயம் நீங்கும். எதிரி தொல்லையும் இருக்காது. எல்லா பிரச்சினைகளிலிருந்தும் உங்களை காப்பாற்றி விடக் கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் இந்த கால பைரவர். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்