கொரோனா காலகட்டத்தில் ஏழைகளின் பசியாற்றும் மரவள்ளி கிழங்கு மீன் குழம்பு செய்வது எப்படி?

meen-kuzhambu
- Advertisement -

இந்த கொரோனா காலத்தில், அன்றாடம் வியாபாரம் செய்து, கூலி வேலை செய்து தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்லும் எத்தனையோ ஏழை எளிய மக்கள் இன்றளவு வருமானம் இல்லாமல், கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு சமயத்தில் வருமானம் இல்லாமல், வறுமையில் இருக்கும் மக்களுக்கு என்னதான் வழி? தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து, வறுமையில் தவிக்கும் கேரள மக்கள், தற்சமயம் தங்களுடைய பசியைப் போக்கிக் கொள்ள, இந்த மரவள்ளி கிழங்குகையும் மீன் குழம்பையும் தான் உணவாக சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். அந்த கேரளத்து மக்கள் தங்களுடைய பசியை ஆற்றிக் கொள்வதற்காக சமைக்கும் அந்த மரவள்ளி கிழங்கு மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று நாமும் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

meen-kuzhambu1

கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபிகளில் இந்த மத்தி மீன் குழம்பும் ஒன்று. இந்த குழம்பை மத்தி மீனை வைத்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த மீனை வைத்து வேண்டுமென்றாலும் நீங்கள் செய்து கொள்ளலாம். முதலில் மத்தி மீனை வாங்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 1 கிலோ அளவு மத்தி மீனுக்கு பின் சொல்லப்படும் அளவுகள் சரியானதாக இருக்கும்.

- Advertisement -

ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, புளிக் கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (சிலபேர் கேரளாவில் இந்த மீன் குழம்பை கொடம்புளியை போட்டு வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

meen-kuzhambu2

முதலில் ஒரு சிறிய கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் தோல் உரித்த சின்ன வெங்காயம் – 5, வெந்தயம் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் – 3 டேபிள்ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கருகாமல் 1 நிமிடங்கள் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும். (உங்களுக்கு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மசாலாக்கள் அதிகமாக தேவைப்பட்டால் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். குழம்பு மிளகாய் தூளை வேண்டுமென்றாலும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.)

- Advertisement -

இந்த கலவை நன்றாக ஆறியதும், மிக்ஸியில் போட்டு விழுது போல அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்துக் கொள்ளுங்கள். 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4 கீனியது, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், இந்த எல்லாப் பொருட்களையும் போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கிக் கொள்ள வேண்டும்.

meen-kuzhambu3

அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த மண் சட்டியில் ஊற்றிக் கொள்ளுங்கள். கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை இப்போது மண் சட்டியில் ஊற்றி நன்றாக கலந்து தேவையான அளவு உப்பையும், மஞ்சள் தூளையும் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த குழம்பை ஒரு மூடி போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு கொதித்து கொஞ்சம் திக்காக வரும் சமயத்தில் தயாராக இருக்கும் மீன்களை குழம்பில் போட்டு ஒரு மூடி போட்டு, 3 லிருந்து 4 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்தாலே போதும். கமகம வாசத்தோடு மத்தி மீன் குழம்பு தயார்.

- Advertisement -

meen-kuzhambu4

அடுத்தபடியாக மரவள்ளிக்கிழங்கு ரெசிபி எப்படி செய்வது. 1 கிலோ அளவு மரவள்ளிக் கிழங்கை வாங்கி கிழங்கில் மேலே இருக்கும் தோள் அனைத்தையும் சீவி எடுத்து விட்டு, இந்த மரவள்ளிக்கிழங்கை ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். கிழங்கு நடுவே இருக்கும் வேர் பகுதியை நீக்கி விடுங்கள். மரவள்ளிக்கிழங்கை மண் போக சுத்தமாக அலசிக் கொள்ளுங்கள்.

maravalli-kizangu1

அடுப்பில் ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை வைத்து மரவள்ளிக்கிழங்கை போட்டு அந்த கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கிழங்கை வேக வைத்துக் கொள்ள வேண்டும். கிழங்கு சரியான பக்குவத்தில் வந்ததும் அதிலிருக்கும் தண்ணீரை வடித்து கிழங்கை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

maravalli-kizangu2

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் – 1 கப், தோலுரித்த பூண்டு – 3, சீரகம் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 1, இந்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து தயாராக வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கில் கொட்டி மரவள்ளிக்கிழங்கு சூடு ஆறுவதற்கு முன்பே நன்றாக மசித்து விடவேண்டும். அரைத்த கலவையையும் மரவள்ளிக் கிழங்கும் சேர்ந்து ஒரு புட்டு பதத்திற்கு வரவேண்டும்.

maravalli-kizangu3

இப்போது நல்ல ஒரு வாழை இலையை விரித்து கொள்ளுங்கள். சுடச்சுட மரவள்ளிக்கிழங்கு புட்டை வைத்துவிட்டு, அதன் மேல், இந்த மீன் குழம்பை ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். ஆஹா கேரள மக்களின் பசியை ஆற்றிய அற்புதமான உணவு இது தானா. என்று நம்முடைய மனதிலும் தோன்றும் அந்த அளவிற்கு சுவைமிக்க இந்த ரெசிபியை வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் சமைத்து சாப்பிடுங்கள்.

- Advertisement -