- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்ச் மாதம் முழுவதும் கஷ்டமில்லாமல் வாழ பரிகாரம்

மார்ச் மாதம் முழுவதும் கஷ்டமில்லாமல் வாழ பரிகாரம்

- Advertisement -

ஒரு நல்ல விஷயத்தை துவங்குவதாக இருந்தால், மாதத்தில் முதல் நாள் துவங்கலாம். அந்த வகையில் பார்த்தால் நாளைய தினம் சனிக்கிழமை, மார்ச் 1ஆம் தேதி பிறக்கவிருக்கிறது. குலதெய்வத்தை வேண்டி இந்த ஒரு புது பழக்கத்தை கொண்டு வந்து பாருங்கள். இந்த மார்ச் மாதம் முழுவதும் உங்களுக்கு வரப்போகும் கஷ்டத்திற்கு அந்த இறைவனே பொறுப்பேற்றுக் கொள்வான். அதாவது நீங்கள், உங்கள் கஷ்டத்திற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

கஷ்டத்தையும் பாரத்தையும் நீங்கள் சுமக்க வேண்டாம். பிரச்சனையை அழகாக இறைவன் கையில் ஒப்படைப்பதற்கான, ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறையைத்தான் இது. இதை வழிபாட்டு முறை என்று வைத்துக் கொண்டாலும் சரி, பரிகாரம் என்று வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது மேஜிக் என்று வைத்துக் கொண்டாலும் சரி, ஆனால் இதன் மூலம் உங்களுக்கு ஒரு பெரிய நல்லது நடக்கப் போகிறது.

- Advertisement -

அந்த வழியை தெரிந்து கொள்ள ஆர்வம் உங்களுக்கு இருக்குதா. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக மட்டும் தான். இந்த மார்ச் மாசம் இந்த முறை உங்களுக்கு ஒர்க் அவுட் ஆச்சுன்னா, அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் இதேபோல நீங்கள் இந்த பழக்கத்தை பின்பற்றிக் கொள்ளலாம்.

மார்ச் மாத பரிகாரம்

ஒரு மாதத்தில் இத்தனை கஷ்டங்கள் தான் எனக்கு வரும் என்று குறிப்பிட்டு யாராலும் சொல்ல முடியாது. கஷ்டம் அது பாட்டுக்கு வரும் போகும். உங்களுடைய வீட்டில் எப்போதுமே ஒரு உண்டியல் வைத்துக் கொள்ளுங்கள். கஷ்டம் தீர்வதற்கான உண்டியல் அது. இதை பூஜையறையில் தான் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

- Advertisement -

அலமாரியில் அல்லது வரவேற்பு அறையில் எந்த இடத்தில் வைத்தாலும் சரி, இன்னைக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டது. என்ன செய்வது ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து உண்டியலில் போடுங்கள். ஒரு ரூபாய் கூட போடலாம் தவறு கிடையாது. இந்த கஷ்டத்தை குலதெய்வம் நீயே பார்த்துக்கொள் உன் கையில் ஒப்படைத்து விட்டேன். இதற்கான தீர்வை நீயே சொல்லிவிடு, என்று சொல்லி ஒரு நிமிடம் அந்த குல தெய்வத்தை வேண்டி பிறகு உங்களுடைய வேலையை நீங்கள் பார்க்கலாம்.

இவ்வளவுதான் வழிபாடு, இவ்வளவுதான் பரிகாரம். உங்களுடைய பிரச்சனையை அந்த தெய்வத்தின் கையில் ஒப்படைத்து விட்டீர்கள். அதற்கான காணிக்கையும் போட்டு விட்டீர்கள். இப்படி இந்த மார்ச் மாதம் முழுவதும் உங்களுக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் மேலே சொன்ன இந்த மெத்தடை ட்ரை பண்ணி பாருங்கள். கஷ்டம் எந்த அளவுக்கு விரைவாக சரி ஆகிறது என்பதை நீங்களே உணருவீர்கள். பாரத்தை நீங்கள் சுமக்கவே வேண்டாம்.

- Advertisement -

அந்த தெய்வம் பார்த்துக் கொள்வோம். குலதெய்வம் தெரியாதா. இஷ்ட தெய்வத்தை வேண்டி போடுங்கள். குலதெய்வம் தெரிந்தாலும் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை சொல்லி உண்டியலில் பணம் போடலாம். தவறு ஒன்றும் கிடையாது. ஆனால் அந்த ஒரு நிமிடத்தில் நீங்கள் வைக்கும் நம்பிக்கையில், ஒரு துளி சந்தேகம் கூட வரக்கூடாது. முழு நம்பிக்கையாக பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.

இந்த மார்ச் மாதம் முடியும்போது அந்த உண்டியலை தூக்கி பாருங்கள். எவ்வளவு பாரத்தை உங்களிடம் இருந்து, அந்த இறைவன் வாங்கிக் கொண்டிருக்கின்றான் என்பது உங்களுக்கு தெரியும். சில்லறை காசுகள் கனமாக இருக்கும் அல்லவா. அந்த அளவுக்கு கனமான கஷ்டம் இந்த மாதம் உங்களுக்கு வந்திருக்கிறது. அந்த கஷ்டத்தை எல்லாம் அந்த இறைவன் ஏற்றுக் கொண்டான் என்பதற்கு இதுவே சாட்சி.

மாத இறுதியில் அந்த உண்டியலை பார்க்கும்போது நமக்கே ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் இந்த மாதத்தை எதிர்கொண்டிருக்கிறோம். இத்தனை கஷ்டங்களுக்கும் தீர்வு கொடுத்த அந்த ஆண்டவன், இனி வரப்போகும் கஷ்டத்திற்கு தீர்வு கொடுக்காமல் போய்விடுவானா என்ன. அவனை நம்பி வாழ்க்கையை நடத்துவோம் என்று துணிச்சலும் நமக்கு வந்து விடும் பாருங்க.

சரி, இந்த நாணயங்களை என்ன செய்யலாம். அடுத்த மாத இறுதியில் கோவில் உண்டியலில் சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் இந்த நாணயத்திற்கு உண்டான பொருட்களை வாங்கி தான தர்ம காரியத்திற்கு பயன்படுத்தலாம், அல்லது கோவில் பிரயாண செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இது ஒரு எளிமையான முறைதான்.

இதையும் படிக்கலாமே: பீரோவில் வைக்கக் கூடாத பொருள்

இந்த கடிகாரத்தில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைப்பவர்கள் இதை சத்தியமாக செய்ய வேண்டாம். இது தான் பிரச்சனைக்கு தீர்வு என்று நினைத்தால் நாளைய தினமே இந்த பரிகாரத்தை தொடங்கி பாருங்கள். உங்களோடு அந்த கடவுள் பயணம் செய்வதை நிச்சயம் உணருவீர்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்