மார்ச் மாத ராசி பலன் 2018

March month rasi palan

மேஷம்:

mesham

மேஷ ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதத்தின் முதற் பாதி சற்று மந்தமாக இருந்தாலும் அடுத்த பாதி உங்களுக்கு சிறப்பாகவே உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெரும் வகையில் செயலாற்றுவீர்கள். அனைத்து விடயங்களிலும் பொறுமையாக சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். சிலர் குலதெய்வ கோவிலுக்கு செல்வது, நீண்ட தூர ஆன்மீக பயணம் மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கான விடை கிடைக்கும் சந்தர்ப்பம் வரும். சுப நிகழ்வு காரணமாக சில நாட்கள் நீண்ட தூர பயணம் செய்ய வேண்டி இருக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரிகள் சற்று கவனமாக இருந்து புது யுக்திகளை கையாண்டால் நல்ல லாபம் பெறலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசி நண்பர்களை பொறுத்த வரை இந்த மாதம் ஒரு விறுவிறுப்பான மாதமாக அமையும். நீங்கள் வேகத்தோடு சேர்ந்து விவேகமாகவும் செயல்படும் மாதம் இது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணிப்பீர்கள். உடல் ரீதியான பிரச்சனைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும். தேவை என்று நினைக்கும் நேரத்தில் பணம் கைக்கு வரும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் அதெல்லாம் விலகி இறுதியில் மகிழ்ச்சியாகவே முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் கூடுதல் லாபம் கிடைக்கும். குலதெய்வ கோயிலிற்கு சென்று வழிபட்டால் இந்த மாதம் உங்களுக்கு மேலும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

- Advertisement -

மிதுன ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு தேவை இல்லாத குழப்பங்கள் மனதில் ஏற்பட கூடும். சிலர் வேலை காரணமாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதத்தின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க செய்யும் காலம் இது. மனைவியால் சிலருக்கு நன்மைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புனித தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களிடம் கொடுத்த வாக்கினை நிறைவேற்றி காண்பிப்பீர்கள். குழந்தைகளிடம் புதிய உற்சாகம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
மிதுன ராசி குணம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

கடகம்:

kadagam

கடக ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சுப செலவுகள் ஏற்பட கூடும். சிலர் வெகுதூர பயணம் மேற்கொண்டு சில நாட்கள் வெளியில் தங்க நேரிடும். அலுவலக பணிகளை செய்பவர்கள் தங்களது பணிகளை செம்மையாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் தங்களது பேச்சு திறனால் நல்ல முன்னேற்றம் காண்பர். இதுவரை வாராத பாக்கி வந்து சேரும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். மாணவ மாணவியர் நல்லமுறையில் தங்களது புத்தி திறனை வெளிப்படுத்துவார்கள். திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

சிம்மம்:

simmam

சிம்ம ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் பல நடக்கும். எதிர்பார்த்த நேரத்தில் பண வரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதே போல அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். சிலருக்கு பதவி உயர்வு கூட கிடைக்கும் காலம் இது. குழந்தைகள் மூலம் மகழ்ச்சிகொள்வீர்கள். மாணவ மாணவியரை பொறுத்தவரை பிறரோடு கவனமாக பழகுவது நல்லது. அதே போல கல்வியிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ஞாயிறு, வியாழன் ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

கன்னி:

kanni

கன்னி ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கும். அதே போல நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வெகு நாட்களாக காத்திருந்த விருப்பங்கள் நிறைவேறும். அரசாங்க ரீதியான காரியங்கள் சுமுகமாக முடியும். கோபத்தை குறைத்துக்கொண்டு எதையும் சுமுகமாக பேசி முடித்துக்கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த விரிசல் சரியாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். மாணவ மாணவியரை தங்களது திறமையை முறையாக வெளிப்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். புதன், வெள்ளி ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

துலாம்:

thulam

துலாம் ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்கள் வாழ்வில் நல்ல திரும்புங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயணங்கள் உங்களுக்கு நல்ல பண வரவை தரும். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். மனதில் தெளிவு பிறக்கும். அதோடு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாதபடி நடந்துகொள்வர். தேவை இல்லாமல் அடுத்தவர்களின் விடயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களை பொறுத்த வரை தங்கள் நட்பு வட்டம் போற்றும்படி செயல்படுவார்கள். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சிற் சில பிரச்சனைகள் ஏற்பட கூடும். எடுத்த காரியங்கள் சற்று இழுபறியாக இருக்கும். ஆனாலும் இறுதியாக நல்லபடியாக முடியும். மனதை தளர விடாமல் எதையும் செய்வது நல்லது. வாயபாரத்தை பொறுத்தவரை சற்று மந்தமாக இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. சிலர் வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவி இருவரும் அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மாணவ மாணவியரை பொறுத்தவரை நன்றாக படித்து நல்ல மதிப்பெண்ணை பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

தனுசு:

dhanusu

தனுசு ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் உங்கள் வாய் திறமையால் பலரது மனதை வென்று காட்டுவீர்கள். அனைவரிடத்திலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆனாலும் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் அதிகம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றபடி வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு புதிய பொறுப்புகளால் சற்று பணிச்சுமை அதிகரிக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே மன ஒற்றுமை ஓங்கும். உறவினர்களுக்குள் இருந்து வந்த மன கசப்பு குறையும். பிறர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். மாணவ மாணவியர் கல்வியில் கவனம் செலுத்தி வெற்றி காண்பார்கள். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
தனுசு ராசி குணம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

மகரம்:

magaram

மகர ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் விரும்பிய அனைத்து காரியங்களையும் தடை இன்றி நிறைவேற்றுவீர்கள். தேவைக்கு ஏற்ப பண வரவு இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பில் ஆதாயம் இருக்கும். விபாரிகளை பொறுத்தவரை உங்களோடு போட்டி போட்டவர்கள் உங்களது யுக்தியை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். சிலர் வேலை காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் வரும். நண்பர்கள் தங்களால் முடிந்த உதவிகளை உங்களுக்கு செய்வார்கள். மாணவ மாணவியர்கள் இந்த மாதம் உற்சாகமாக செயல்படுவார்கள். ஞாயிறு,செவ்வாய் ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

 

கும்பம்:

kumbam

கும்ப ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்கள் கவலைகள் அனைத்தும் குறையும். இதுவரை தொழில் மற்றும் உத்யோகத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சிலருக்கு தேவை இல்லாத வீண் செலவுகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக பயணம் மூலம் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எடுத்த காரியம் சற்று தாமதம் ஆனாலும் நல்லபடியாக முடியும். அலுவலக பணிகளில் உள்ளவர்கள் திறமையாக செயல்படுவார்கள். வெளியூர் செல்பவர்கள் உங்களுடைய உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம். மாணவர்கள் தங்களது பேனா, பென்சில், புத்தகம் போன்றவற்றை கவனமாக வைத்துக்கொள்வது அவசியம். ஞாயிறு, வியாழன் ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

மீனம்:

meenam

மீன ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உடல் உபாதையால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சரியாக திட்டமிட்டு காரியத்தை தொடங்கினாலும் சில மாறுதல்கள் காரணமாக தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் கவனமாக செயல்படவும். தாயின் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை தேவை. உறவினர்கள் வருகையால் வீடு நிறைந்து இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை சேர்க்கும்.

மாத ராசி பலன், வார ராசி பலன், தின பலன், மந்திரம், ஆன்மீக கதைகள் என பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English overview:

This article explains about the march month rasi palan in tamil. It covers mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulam, viruchigam, thanusu, magaram, kumbam and meenam. In Tamil monthly rasi plan is called as matha palan. So we can say it as march matha rasi palan in tamil.