2023 மார்ச் மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

march-matha-rasi-palan
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள் வேறுபடுகின்றன. அந்த வகையில் ஆங்கில மாதமாக இருக்கக் கூடிய இந்த மார்ச் மாதம் முழுவதும் ஒன்பது கிரகங்களின் அமைப்பை பொறுத்து 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது? என்பதை தான் இந்த ஜோதிட குறிப்பு தகவல்களின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

மேஷம்:
Mesham Rasi
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் வருமானத்தை உயர்த்துவதில் அதிக நாட்டம் இருக்கும். எவருக்கும் அடிபணியாத நீங்கள் சில இடங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகம் காணப்படும். சுய தொழில் செய்பவர்கள் பணி நிமித்தமாக அடிக்கடி அலைச்சலை சந்திக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடம் மாற்றம் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் உறவுகளுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியுடன் லாபங்கள் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நவீன உபகரணங்களால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்:
midhunam
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. வருகின்ற பிரச்சனைகளை உடனுக்குடன் சரி செய்யுங்கள் காலதாமதப்படுத்தாதீர்கள். குடும்பத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்கள் முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போராடலாம். எதிலும் அவசரப்படாமல் நிதானத்தை கடைபிடியுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுப்பிக்கும் விஷயங்களில் வீண் விரயங்கள் வரலாம். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து உங்களை திக்கு முக்காட செய்யும். நடக்காது என்று நினைத்த விஷயங்கள் கூட நடக்க ஆரம்பிக்கும். கணவன் மனைவி உறவிற்குள் அனாவசிய வாக்குவாதங்கள் வேண்டாம் பிரிவு உண்டாகலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் பனி சுமை கூடும் இதனால் உடல் அசதியும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களில் சாதக பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்:
simmam
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் நீங்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அக்கறையும், அரவணைப்பும் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சில விஷயங்களில் திடீர் வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வரவை காட்டிலும் செலவு கூடும் என்பதால் சிக்கனத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் வேலையில் கண்ணும் கருத்துமாக ஈடுபடக் கூடிய அமைப்பாக இருக்கிறது. புத்துணர்ச்சியுடன், புது பொலிவுடன் புதுமைகளை படைக்க ஆயத்தமாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் வரக்கூடிய சிறு சிறு சண்டை, சச்சரவுகள் அவ்வப்பொழுது தோன்றி மறையும். குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பீர்கள், அவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய உள்ளுணர்வை நோக்கி பயணம் செய்வீர்கள்.

துலாம்:
Thulam Rasi
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் புதிய சூழலை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு இடமாற்றம், வேலை மாற்றம் போன்ற மாற்றங்கள் நிகழலாம். சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த சங்கடமான சூழல் மாறும். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் வரலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முடிவு எடுக்கும் திறன் குறையும். குழப்பங்கள் நீடிக்கும் என்பதால் முக்கிய விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சொத்து பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மந்தமான சூழ்நிலை நிலவும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் கடினமான சில விஷயங்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. சுலபமான விஷயம் கூட கஷ்டப்பட்டு தான் பெற வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாக கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் சொத்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உடன் பணி புரிபவர்களிடம் அனாவசிய ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சுய அறிவால் சாதகமான முடிவுகளை பெறலாம். ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாச மாதம் முழுவதும் எச்சரிக்கை உணர்வு காணப்படும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு கூடுமானவரை குறுக்கு வழியை நாடாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொடுப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தவறான புரிதல்களால் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனம் அலைபாயும், மனதை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

மகரம்:
Magaram rasi
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் பயணங்களால் புதிய அனுபவங்களை காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வீண் அலைச்சலும், உடல் அசதியும் அவ்வப்பொழுது ஏற்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும். எதையும் ஒன்றாக பேசி முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புத்தி மழுங்கி போக வாய்ப்புகள் உண்டு, சரியான பாதையை தேர்ந்தெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமூக சிந்தனையுடன் இருப்பீர்கள். உங்களுடைய இரக்க சுபாவத்திற்கு நன்மைகள் நடக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாச மாதம் முழுவதும் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதுவது நல்லது. எதிலும் பரந்த மனப்பான்மையுடன் செயல்படுங்கள். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பது உத்தமம். குடும்பத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு கொள்வது இருக்கும் சிக்கல்கள் அவிழும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகம் செய்பவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் கடுமையாக பேசாதீர்கள்.

மீனம்:
meenam
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் முழுவதும் புதிய நம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய கட்டுப்பாடுடன் பொதுநலத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அடிக்கடி குடும்பத்துடன் வெளியில் பயணம் செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மாத இறுதியில் எதிர்பாராத திடீர் லாபம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தொடர்பு விஷயத்தில் கவனம் வேண்டும். வீண் பழிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு, சிந்தித்து செயல்படுங்கள். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -