இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக தீவிர பயிற்சி எடுத்து வரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் – வீடியோ

Stonis

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிவீரர்கள் இன்று ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஸ்டோனிஸ் இந்திய மைதானங்களில் ஸ்பின் அதிக அளவு ஆகும் என்பதால் அதற்காக தனியே தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று மதியம் அவர் செய்த இந்த பயிற்சியினை வீடியோ வடிவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியானதும் அந்நாட்டு ரசிகர்கள் இந்திய அணியை வெல்ல வாழ்த்துக்கள் என்று பாவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இருப்பினும், இந்த தொடர்தான் உலகக்கோப்பை தொடருக்கு முன் இரு அணிகளின் பலத்தினையும் சோதிக்கும் தொடராகும். எனவே, இந்த தொடரில் இரு அணிகளும் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதால் ரசிகர்களுக்கு இந்த தொடரானது ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்கலாமே :

முட்டாள் தனமான முடிவை நாமே தேடி கொள்ள வேண்டாம். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா இதற்காக மோதியே தீர வேண்டும் – சுனில் கவாஸ்கர் விருப்பம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்