நாளை மார்கழி அமாவாசை – இவற்றை செய்தால் நன்மைகள் பெறலாம்.

Aadi Amavasai

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடத்தில் சூரியன் தட்சிணாயனம் எனப்படும் தென்திசையில் சஞ்சரிக்கும் இறுதியான மாதம் மார்கழி மாதம் ஆகும். மார்கழி மாதம் என்பது சிவ மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய போரூர் மாதமாகும் இந்த மாதத்தில் வரும் அனைத்து தினங்கள், திதிகள் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் “மார்கழி மாத அமாவாசை” தினத்தின் சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Amavasai Tharpanam

“மார்கழி” மாதத்தில் வரும் அமாவாசை தினமும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் போன்றே முக்கியமான திதி தினமாகும். இம்மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நன்மையானது. மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு, குறிப்பாக எதிர்பாரா விதத்தில் மரணித்த முன்னோர்கள் அல்லது உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் போன்றவற்றை தருவதாலும் அல்லது அவர்களை வழிபடுவதலும் அவர்களுக்கு பெருமாளின் வைகுண்ட வாசம் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தரலாம். இப்படி தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு தரலாம். யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இத்தினத்தில் ராமேஸ்வரம், காவேரி,கங்கை போன்ற புனித கடல், ஆறுகளில் தலைமுழுகி முன்னோர்களை வழிபடலாம்.

crow feeding

மார்கழி அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் முன்னோர்களுக்கு சரியான காலத்தில் பித்ரு ஸ்ராத்த சடங்குகள் செய்ய முடியாததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். உங்கள் பரம்பரையில் இயற்கைக்கு மாறான முறையில் மறைந்த முன்னோர்கள் அல்லது உங்களின் உறவினர்களின் ஆன்மா சாந்தியடைந்து நற்கதியடையும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் இந்த வேர் இருந்தால் பணம் சேரும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Margazhi amavasya in Tamil. It is also called as Margazhi matham in Tamil or Margali matham sirappugal in Tamil or Margali matha tithi in Tamil.