மார்கழி மாதம் நிலை வாசலில் போடவேண்டிய கோலம்

mahalshmi5
- Advertisement -

மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு அறிவியல் ரீதியாக எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும். பெண்களுக்கு காலை எழுந்தவுடன் கோலம் போடுவது ஒரு உடல் பயிற்சி. அது எல்லாமே ஏதோ ஒரு வகையில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வாழ்க்கையில் அமைந்த விஷயங்கள்.

இருந்தாலும் ஆத்மாற்றமாக ஆன்மீகம் சார்ந்த சில விஷயங்களை இந்த மார்கழி மாதத்தோடு சேர்த்து வைத்து பார்க்கும் போது, அளவில்லாத மகிழ்ச்சியும், மன திருப்தியும் நமக்கு கிடைக்கிறது. இந்து ஆகம விதியின்படி மார்கழி மாதம் என்றாலே வைகுண்டத்தில் இருக்கும் மகாலட்சுமியும் விஷ்ணு பகவானும் இறங்கி பூலோகத்திற்கு வருவதாக ஒரு ஐதீகம் உண்டு.

- Advertisement -

இப்படி அவர்கள் பூலோகத்தில் நடந்து வரும் போது, எந்த வீட்டில் இப்படி கோலம் போடப்பட்டிருக்கிறதோ, அந்த வீட்டிற்குள் இவர்கள் நுழைவார்களாம். செல்வ வளங்களை வாரி வழங்குவார்களாம். இதன் மூலம் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இப்படி மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் வர வைக்க நம் வீட்டு வாசலில் மார்கழி மாதத்தில் எப்படி கோலம் போடுவது. தெரிந்து கொள்ள ஆர்வம் உங்களுக்கும் உள்ளதா. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

மார்கழி மாதம் நிலை வாசலில் போட வேண்டிய கோலம்

மார்கழி மாசம் நிலை வாசலில் காவி தீட்டி கோலம் போட வேண்டும். சில பேர் இதை செம்மண் என்று சொல்லுவார்கள். இந்த சிவப்பு நிற செம்மண்ணை தண்ணீரில் கரைத்து வாசலில் படிகளில் தீட்டி, அது கொஞ்ச நேரம் காய்ந்த பிறகு, அந்த செம்மண்ணுக்கு மேலே அரிசி மாவு கோலம் போட்டு பாருங்கள். அது அத்தனை லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

- Advertisement -

மண்பாங்கான இடத்தில் அரிசி மாவில் வெள்ளை நிறத்தில் கோலம் போட்டுவிட்டு, இந்த செம்மண்ணை அப்படியே அதற்கு பார்டர் கொடுத்து பாருங்கள். மகாலட்சுமியே உங்கள் வாசலில் அமர்ந்து இருப்பது போல அத்தனை லட்சணம் இருக்கும். இந்த காவிக்கு பின்னால் ஒரு சில அறிவியல் ரகசியங்களும் மறைந்திருக்கின்றது.

அந்த காலத்தில் குடிசை வீடுகளில் காவி தீட்டி கோலம் போட்டால் பூச்சி போட்டுக்கல் அண்டாது என்பதற்காக இதை பின்பற்றினார்கள். இன்னும் ஆழ்ந்து இதை ஆராய்ச்சி செய்து பார்த்தால் செம்மண்ணில் கேலமைன் என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும், அதை விரல்களால் தொட்டு கோலம் போடும்போது நம்முடைய தோளில் இருக்கும் செல்களுக்கு நன்மை தரக்கூடியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் தாண்டி இன்னும் பல நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதையெல்லாம் பார்க்க இந்த ஒரு பதிவு போதாது. அந்த விஷயங்கள் எல்லாம் நம்முடைய நன்மைக்காகத்தான் சொல்லப்பட்டுள்ளது. இதை நீங்கள் அறிவியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது ஆன்மீக ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி, உங்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்க வேண்டுமா.

இதையும் படிக்கலாமே: பரம ஏழையையும் பணக்காரனாக மற்றும் பஞ்சமி தீப வழிபாடு

இந்த மார்கழி மாதம் முழுவதும் நிலை வாசலில் கோலம் போடும்போது, கொஞ்சம் இந்த செம்மண்ணையும் சேர்த்து போடுங்களேன். நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நல்லது நடக்கும், உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி தேவி வருவது நிச்சயம். முன்னோர்கள் சொன்ன எந்த விஷயமும் நமக்கு கெடுதல் தராது. அதை மறந்ததால் தான் கெடுதலை அனுபவிக்கின்றோம் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -