மார்கழி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டிற்கு மிக மிக உகந்த மாதம். பெருமாளின் அவதாரமான லக்ஷ்மி நரசிம்மரை மார்கழி மாதம் வரக்கூடிய சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் சிறப்பான பலனை பெறலாம். இன்றைய தினம் மார்கழி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் இருக்கிறது.
ஆகவே இன்று மாலை பூஜை அறையில் பின் சொல்லக்கூடிய முறையில் விளக்கு ஏற்றி பின் செல்லக்கூடிய நெய்வேதியத்தை வைத்து லட்சுமி நரசிம்மரை மனதார நினைத்து வழிபாடு செய்தால் நீங்கள் வேண்டிய வரம் உடனே கிடைக்கும். குறிப்பாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், குடும்பத்தில் சண்டை சச்சரவோடு இருப்பவர்கள், கடன் சுமையில் அவதிப்படுபவர்கள், எல்லாம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் உங்களுடைய கஷ்டங்கள் விரைவில் தீர்க்கப்படும்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு
இன்று மாலை பெருமாள் திரு உருவப் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளவும். லட்சுமி நரசிம்மரின் திரு உருவப்படத்தை வீட்டில் வைக்கலாம். உங்கள் வீட்டில் லட்சுமி நரசிம்மர் திருவுருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வைக்கவும். லட்சுமி நரசிம்மர் திருவுருவப்படம் இல்லாதவர்கள் பெருமாள் படத்திற்கு முன்பு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது.
அடுத்தபடியாக ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து ‘ஓம் லட்சுமி நரசிம்மாய நமோ நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை இறைவனிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும். லட்சுமி நரசிம்மருக்கு வெண்பொங்கல், மிளகு சேர்த்த வெண்பொங்கல் அல்லது தயிர் சாதம் நெய்வேத்தியமாக வைக்கலாம்.
உங்களுக்கு எது சௌகரியமோ அதை செய்து நெய்வதியமாக வைத்து, இன்றைய தினம் லட்சுமி நரசிம்மரிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்து, தீப துப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டால், நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் லட்சுமி நரசிம்மர் சன்னிதானம் இருக்கிறது என்றால், அந்த கோவிலுக்கு சென்று விளக்கு போடலாம்.
இதையும் படிக்கலாமே: மார்கழி மாத சிறப்பு பாடல்
அந்த லட்சுமி நரசிம்மருக்கு வெண்பொங்கல் பிரசாதமாக செய்து கொடுத்து நெய்வேதியம் செய்து நாலு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தீர்கள் என்றால் மேலும் மேலும் சிறப்பான பலனை தரும் என்பது நம்பிக்கை. இந்த எளிமையான வழிபாடு இந்த மார்கழி மாதத்தில் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.