மார்கழி மாதம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்

poojai
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே வாசலில் போடப்படும் பெரிய பெரிய கோலங்களும் வீட்டில் ஏற்றப்படும் தீபமும் ஆலயத்தில் கேட்கப்படும் பஜனை ஒலியும் தான் ஞாபகத்திற்கு வரும். இப்போதெல்லாம் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றித் தான் வருகிறோம். இத்துடன் சேர்த்து இந்த மாதத்தில் நாம் செய்யும் ஒரு வழிபாடு ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலனைத் தரும் அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாடு

மார்கழி மாதத்தில் பின்பற்ற வேண்டிய பல விஷயங்களில் முதலாவதாக செய்ய வேண்டியது பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் தீபம் ஏற்றுவது. இந்த மாதம் முழுவதும் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் தீபம் ஏற்றும் போது நீங்கள் எதை நினைத்து ஏற்றுகிறீர்களோ அதை நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

இதற்கு காலையில் 5:30 மணிக்குள்ளாக தீபம் ஏற்றி விட வேண்டும். ஆகையால் சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்ட வேண்டும். பலரும் இதை காலையில் எழுந்து செய்ய முடியாது என்று இரவு உறங்கும் முன் வாசலில் கோலம் போடுவார்கள் ஆனால் அப்படி செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதன் பிறகு நிலை வாசலில் இரண்டு அகல் தீபம் ஏற்றுங்கள் அதன் பிறகு பூஜையறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு வீட்டில் சாம்பிராணி தூபம் போட்ட வேண்டும்.

இந்த நேரத்தில் முடிந்தால் ஏதேனும் நெய்வேத்தியம் செய்யுங்கள் இல்லை என்றால் ஒரு டம்ளர் பாலை நெய்வேத்தியமாக வையுங்கள். அதன் பிறகு பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேளுங்கள் நிச்சயம் கிடைக்கும். அடுத்த வருடம் மார்கழி மாதத்திற்குள் உங்களுடைய இந்த நிலை மாறி சந்தோஷமான வாழ்க்கை வாழக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

- Advertisement -

அடுத்து இந்த மார்கழி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிபாடு தனுர் பூஜை. மார்கழி மாதத்திற்க்கு தனுர் என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் அனைத்து ஆலயங்களிலும் காலையில் தனுர் பூஜை செய்வார்கள். அதில் ஒரு நாளாவது நீங்கள் பூஜை செய்யுங்கள். இதை செய்ய முடியாதவர்கள் பூஜைக்கு அபிஷேக பொருளில் பால் மட்டுமாவது வாங்கிக் கொடுங்கள்.

இந்த ஒரு பூஜையை செய்தால் வருடம் முழுவதும் இறைவனை நீங்கள்வழிபட்ட பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் வாய்ப்பு உள்ளவர்கள் நிச்சயமாக இந்த தனுர் பூஜையை செய்யுங்கள். முடியாதவர்கள் அபிஷேகத்திற்கு ஏதேனும் வாங்கி கொடுங்கள்.

- Advertisement -

அடுத்து நம்முடைய சந்ததியை வறுமை இல்லாமல் வாழக் கூடியது அன்னதானம். இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு நாளாவது அன்னதானம் செய்தால் நம்முடைய சந்ததி முழுவதுமே வறுமை இல்லாமல் வாழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டில் கொஞ்சமாக பொங்கல் சுண்டல் என ஏதாவது செய்து மார்கழி மாதத்தில் காலையில் ஆலயத்திற்கு வருபவருக்கு தானமாக கொடுக்கலாம். இதுவும் அன்னதானம் செய்த பலனை தரும்.

இதையும் படிக்கலாமே: வாழ்வை வளமாக்கும் வாராகி வழிபாடு

தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் உகந்த மாதமான இந்த மார்கழி மாதத்தில் இது போல வழிபாடு செய்து நாமும் நம்முடைய செல்வ நிலையை உயர்த்தி கொண்டு நல்ல முறையில் வாழ வழித்தேடி கொள்ளலாம்.

- Advertisement -