இன்று அதிசக்தி வாய்ந்த மார்கழி பவுர்ணமி! நினைத்த ஆசைகள் நிறைவேற பெண்கள் சந்திரனுக்கு இதை செய்ய மறக்காதீர்கள்!

pounami-perumal-lingam
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. மற்ற நாட்களை விட அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பிரபஞ்சத்தின் சக்தி அதிகரிக்கும் என்று கூறுவார்கள். இதனால் இந்நாட்களில் நாம் செய்யும் வழிபாடுகள் நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை. பல பூஜைகள், பரிகாரங்கள் இந்த நாட்களில் தான் நடைபெறும். அத்தகைய அதிசக்தி வாய்ந்த பவுர்ணமி நாட்களில், மார்கழி பவுர்ணமி ரொம்பவே விசேஷமானது. எனவே இந்நாளில் பெண்கள் மனதில் நினைத்த விஷயங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள தவறாமல் கடைபிடிக்க வேண்டிய பூஜை முறை என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

mummoorthigal

மார்கழிப் பௌர்ணமியில் மும்மூர்த்திகளையும் வழிபடுவது சிறப்பு! அதிலும் குரு பகவானுக்கு உச்ச ராசியாக இருக்கும் கடகம் சந்திர பகவானுக்கு உரியதாக இருக்கிறது. எனவே இந்த தனுர் மாதத்தில் பவுர்ணமி நாளில் கோவிலுக்கு சென்று சந்திர வழிபாடு செய்வது, குரு வழிபாடு செய்வது, மும்மூர்த்திகளை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களை தரும். குறிப்பாக குருவருள் பெற இந்நாள் மிகுந்த நன்நாளாக இருக்கின்றது.

- Advertisement -

இன்று நாள் முழுவதும் விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் சூரியன் மறைந்த பின்னர் தத்தம் இஷ்ட தெய்வ கோவிலாக சிவன் கோவில், பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். மேலும் அங்கு கொடுக்கும் தீர்த்தத்தை பருகுவதும், விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வதும் சகல பிணிகளையும் தீர்க்கும் அரு மருந்தாக செயல்படும்.

chandrashtama

மார்கழிப் பௌர்ணமியில் சந்திரனை நோக்கி பெண்கள் இவ்வாறு வழிபட வேண்டும். ஒரு பூஜை தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சந்திரனுக்குப் பிடித்த வெள்ளை நிறமாக இருக்கும் ஏதாவது ஒரு நைவேத்தியத்தை வையுங்கள். ரவா லட்டு, பால் பாயாசம், வெள்ளை இனிப்பு வகைகள் ஏதாவது வைக்கலாம். அதனுடன் தெய்வீக சக்தி படைத்துள்ள டைமண்ட் கல்கண்டு வைக்கலாம். பின்னர் அதில் ஒரு விளக்கு ஏற்றி தட்டில் வைத்து சந்திரனை நோக்கி காண்பிக்க வேண்டும். முழுமனதோடு நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல்களை வேண்டிக் கொள்ள வேண்டும் மேலும் கீழ்வரும் இந்த சந்திர காயத்ரி மந்திரத்தை 108 முறை அமைதியாக தியான நிலையில் சந்திர ஒளி படும் இடத்தில் அமர்ந்து பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்கள் உடனே பலிக்கும்.

- Advertisement -

சந்திர காயத்ரி மந்திரம்:
ஓம் பத்மவத்வஜாய வித்மஹே,
ஹேம ரூபாய தீமஹி,
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்!!!

chandrashtama

நாம் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கும் என்பார்கள். உடலால் செய்த பாவத்திற்கு தண்டனை உடலாலும், மனத்தால் செய்த பாவங்களும் மனதாலும், ஆன்மாவால் செய்த பாவங்களுக்கு ஆன்மாவலும் நாம் அனுபவிக்க வேண்டி இருக்கும். இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ள இந்த மார்கழி பவுர்ணமி சிறந்த நாளாக நிச்சயம் இருக்கும். மும்மூர்த்திகளின் ஆசியும், குருவருளும், சந்திர அருளும் கிடைக்க இந்த மார்கழி பவுர்ணமியை கட்டாயம் தவற விட்டுவிடாதீர்கள். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சந்திர வழிபாடு செய்து சந்திரனுடைய அருளைப் பெற்றுக் கொள்ளலாம். துளசி தீர்த்தம், வில்வ தீர்த்தம் போன்றவற்றை செய்ய முடிந்தால் செய்து படையுங்கள். சிவனுக்கு தனி வழிபாடு பெருமாளுக்கு தனி வழிபாடு செய்யும் பழக்கம் பொதுவானது ஆனால் மார்கழி மாதத்தில் இவ்விரு தெய்வங்களுக்கும் சேர்த்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -