நாளை அற்புதம் வாய்ந்த மார்கழி மாதத்தின் மூன்றாவது நாள். நாளைய தினம் சங்கடஹர சதுர்த்தி திதியானது வந்திருக்கிறது. உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை சங்கடங்களும் ஒட்டுமொத்தமாக உங்களை விட்டு விலகி செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் விநாயகர் வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.
இப்படித்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் சௌகரிய படி நாளைய தினம் விநாயகரை வழிபாடு செய்யுங்கள். மனதார ஒரு முறை விநாயக பெருமானை மனதில் நினைத்து, விநாயகா என் சங்கடத்தை எல்லாம் தீர்த்து வை என்று கேட்டாலும், அந்த பிள்ளையார் உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். இருந்தாலும் சில பரிகார முறைகளை நம் பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் அல்லவா. அதிலிருந்து ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி
உங்கள் வீட்டு பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் இருக்கிறாரா. அவருக்கு 2 வெற்றிலை, 2 பாக்கு, 2 வாழைப்பழம், ஒரு செம்பருத்திப்பூ, வாங்கிக்கொண்டு போங்க. செம்பருத்தி பூவை விநாயகருக்கு சூட்டுங்கள். தாம்பூலத்தை அவர் பாதத்தில் வையுங்கள். முடிந்தால் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். அந்த விநாயகரை 27 முறை வளம் வர வேண்டும். உங்களுக்கு இப்போது நிறைவேற வேண்டிய ஒரே ஒரு கோரிக்கை என்ன. அதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோரிக்கையை விநாயகரிடம் சொல்லுங்கள்.
திருமணமாக வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், கடன் குறைய வேண்டும், வருமானம் பெருக வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், கணவன் மனைவி ஒற்றுமை தேவை, பிள்ளைக்கு ஆரோக்கியம் தேவை, என்று என்ன வரம் வைத்தாலும் சரி அது ஒரு வேண்டுதலாக இருக்கட்டும்.
அந்தப் பிள்ளையாரை ஒரு முறை வலம் வந்து, பிள்ளையார் முன்பாக நமஸ்காரம் செய்யுங்கள். மீண்டும் இரண்டாவது முறை வலம் வந்து விநாயகர் முன்பாக நமஸ்காரம் செய்யுங்கள். 27 சுற்று, 27 நமஸ்காரம், 27 முறை உங்கள் பிரார்த்தனையை விநாயகரிடம் சொல்ல வேண்டும். 27 முறைக்கும் மேலே எத்தனை முறை விநாயகரிடம் உங்கள் பிரார்த்தனை சொன்னாலும் தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே: மார்கழியில் செய்ய வேண்டிய தானம்
இதுபோல நாளைய தினம் விநாயகரை சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்த நேரத்தில், எவர் ஒருவர் வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் நல்ல செய்தி வந்து சேரும். நீங்கள் விநாயகரிடம் என்ன வேண்டுதல் பலிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தீர்கள், அந்த வேண்டுதல் இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் பலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை நாளைய தினம் சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யும்போது தான், முழு பலனை அடையலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.