இன்று புதன்கிழமையோடு வந்திருக்கும் மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி. இந்த ஆங்கில வருடத்தின் கடைசி சங்கடஹர சதுர்த்தி என்று கூட இந்த நாளை சொல்லலாம். நம்முடைய சங்கடங்கள் எல்லாம் இந்த வருடத்தோடு ஒரு முடிவுக்கு வரவேண்டும். வரக்கூடிய புது வருடம், புது வசந்தமானது நம் வாழ்க்கையில் வீச வேண்டும் என்று நினைத்தால், இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் இன்று மாலை ஏற்றி விநாயகரை மனமுருக வழிபாடு செய்யுங்கள்.
சங்கடம் தீர்க்கும் தீபம்
இன்று 18.12.2024 புதன்கிழமை மாலை இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்ற போகிறீர்கள். மாலை 6 மணிக்கு மேலாக தான் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்வது சிறப்பு. பூஜை அறையில் ஒரு தட்டுக்கு மேலே மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். சின்ன பஞ்சிதிரி அளவுக்கு வெட்டிவேரை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
பஞ்சி திரியையும் வெட்டி வேறையும் ஒன்றாக திரித்து, அந்த நல்லெண்ணெயில் போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த விளக்கு ஏற்றி இருக்கும் நல்லெண்ணெயில் 1 ரூபாயை போட வேண்டும். உள்ளங்கைகளில் ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு, உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை அந்த பிள்ளையாரிடம் சொல்லுங்கள். எந்த வேண்டுதலாக இருந்தாலும் சொல்லலாம்.
கடன் சுமை, பண பிரச்சனை, பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க, பிள்ளைகள் நன்றாக படிக்க, ஆரோக்கியம் பெற, என்று உங்களுக்கு என்ன தேவையோ அதை விநாயகரிடம் கேளுங்கள். பிறகு வேண்டுதலை முடித்துவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மண் அகல் விளக்கில் ஊற்றி இருக்கும் எண்ணெயில் போட்டு, மண் அகல் விளக்கு ஏற்றி வையுங்கள்.
வீட்டில் மற்ற விளக்குகளை எல்லாம் ஏற்றி விநாயகருக்கு அருகம்புல் போட்டு, உங்களால் முடிந்த நெய்வேதியம் வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். தீபம் முழுமையாக எரிந்து முடிந்ததும், அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து துடைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த சங்கடஹர சதுர்த்தி வரும்போது கோவிலுக்கு சென்று ஒரு சூரை தேங்காய் உடைத்து, இந்த 1 ரூபாய் நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். இதோடு என்னுடைய சங்கடங்கள் எல்லாம் தீர வேண்டும், வரக்கூடிய புது வருடத்தில் என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் சங்கடங்கள் தீரும்.
இதையும் படிக்கலாமே: வறுமையை போக்கும் குசேலர் தினம்
அதிலும் இது மார்கழி மாதம் என்பதால், இந்த மாதத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதலுக்கு எல்லாம் பல மடங்கு பலனை கொடுக்கக்கூடிய சக்தி, இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.