ஓசோன் படலம் மிக அருகில் வரும் மார்கழி மாதம்! என்ன செய்தால் நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

oson-krishnar
- Advertisement -

மாதங்களில் மிக சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது மார்கழி மாதம். இதற்கு காரணம் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சமாக விளங்கும் இந்த மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்மீகத்தில் ஒப்பற்ற மாதமாக விளங்கும் இந்த மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் ஆனது மிக அருகில் வருமாம்! வர இருக்கும் மார்கழி மாதத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

oson-layer

ஓசோன் படலம் எல்லா மாதங்களைக் காட்டிலும் மார்கழி மாதத்தில் பூமிக்கு மிக அருகில் வந்திருக்கும். இதனால் அதிகாலையில் எழுபவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க கிடைக்கிறது. இதனால் உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளும், நோய்களும் தீர்கிறது. எனவே இந்த அற்புதமான மாதத்தில் அதிகாலையில் எழ பழகிக் கொள்வது மிகவும் நன்மைகளை கொடுக்கக் கூடியது ஆகும்.

- Advertisement -

அதிகாலையில் எழுந்து ஜில்லென்று இருக்கும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து சுத்தமாகி நல்ல உடை தரித்து பெண்கள் வாசலில் வண்ணக் கோலங்கள் வரைந்து வைத்தால் அந்த மகாலக்ஷ்மியே உங்கள் இல்லத்திற்கு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. ஆனால் இன்றோ மார்கழி மாதம் குளிர் தாங்க முடியாமல் இரவிலேயே கோலம் போட்டு வைத்து விடுகின்றனர். இதில் ஒரு பயனும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

kolam

மார்கழி மாதம் தேவர்களுக்கு நாம் செய்யும் அதிகாலை வழிபாடு நமக்கு கிடைக்க வேண்டிய அத்தனை நன்மைகளையும் கிடைத்த செய்யுமாம். இம்மாதத்தில் மேற்கொள்ளும் இறை வழிபாடுகளுக்கும் மிகுந்த மகத்துவம் காணப்படுகிறது என்பதை திருப்பாவை, திருவெம்பாவை போன்ற நூல்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மார்கழி வழிபாடாக இன்றும் நம் கோவில்களில் வேதத்திற்கு பதிலாக திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றை பாராயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மார்கழி மாதத்தில் வரும் சஷ்டி, ஏகாதசி, திருவாதிரை நட்சத்திரம், அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற தினங்கள் மிகவும் விசேஷமானதாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவ அம்சமாக விளங்கும் நடராஜருக்கு திருவாதிரையில் விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம். செய்த பாவங்கள் தீர, கலைத்துறையில் சிறந்து விளங்க, ஆடல் துறையில் சிறக்க ‘திருவாதிரைக்கு ஒருவாய் களி’ என்னும் பழமொழிக்கு ஏற்ப இந்நாளில் ஏழு கறி கூட்டும், திருவாதிரை களியும் இறைவனுக்கு படைக்கப்படுகிறது.

vaikunta-ekadasi

மந்திரத்திற்கு எப்படி காயத்ரியோ, விரதத்திற்கு அப்படி ஏகாதசி ஆகும். அதிலும் மார்கழி மாதம் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி அன்று துளசி தண்ணீரை பருகி, முழுநாள் விரதமிருந்து திருமாலை போற்றிப் புகழ்ந்தால் வைகுண்ட பதவி வாய்க்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுடைய மனதிற்குப் பிடித்த மணமகனை மணந்து கொள்ள மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, விட்டு ஆண்டாள் கோவிலுக்கு சென்று திருப்பாவை பாடி மகிழலாம். மேலும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாவை நோன்பு விரதத்தை மேற்கொண்டு வழிபாடு செய்தால் நல்ல கணவன் வாய்ப்பார் என்பது நம்பிக்கை. ஆண்டின் இறுதியான டிசம்பர் மாத இறுதி நாளில் மலைமேல் இருக்கும் முருகனுக்கு படி உற்சவம் எடுப்பது சிறப்பு! திருப்புகழ் பாடி மலை ஏறி சென்று முருகனை தரிசித்து வாருங்கள், மலை போல் வந்த பிரச்சினைகள், எல்லாம் பனி போல் நீங்கும்.

- Advertisement -