இது மார்கழி மாதம். தேவர்களுக்கு எல்லாம் இந்த மாதம், பிரம்ம முகூர்த்த நேரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் செய்யும் பரிகாரங்களும் வேண்டுதல்களும், வழிபாட்டு முறைகளும் பல மடங்கு பலனை நமக்குத் தரும். அந்த வகையில் மார்கழி மாதத்தில் இன்றைய தினம் வந்திருக்கக்கூடிய தேய்பிறை பஞ்சமி திதியை, பற்றிய சிறப்புகளை பற்றியும், இந்த நேரத்தில் கடன் சுமை குறைய நாம் செய்ய வேண்டிய 2 பரிகாரத்தை பற்றியும் தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் ஒரு மணிக்கு பஞ்சமி திதியானது பிறக்கவிருக்கிறது. வியாழக்கிழமை வரும் பஞ்சமி திதியை குபேர பஞ்சமி என்று சொல்லுவார்கள். நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1:55 மணி வரை இந்த பஞ்சமி திதி இருக்கிறது. ஆக வியாழக்கிழமை கடன் தீர பரிகாரம் செய்யப்போகின்றோம்.
வெள்ளிக்கிழமை காலை நம் வீட்டிற்குள் பணம் வருவதற்கு இன்னொரு பரிகாரத்தை செய்ய போகிறோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இந்த இரண்டு பரிகாரத்தையும் ஒரு சேர சேர்த்து செய்பவர்களுக்கு ஒரு போதும் பணத்தால் வாழ்வில் பிரச்சனை வரவே வராது.
முதலில் இன்று 19-12-2024 வியாழன் மாலை செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்த்து விடுவோம். நவகிரகங்களால் நமக்கு வரக்கூடிய பாதிப்புகளை தடுத்து விட்டாலே போதும் பாதி பிரச்சனைகள் சரியாகும். அந்த வகையில் நமக்கு கடன் வருவதற்கும் காரணமாக இருப்பது நவகிரகங்கள் தான். நவகிரகங்களுக்கு உரிய பொருள் நவதானியம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நவதானியமும் சேர்ந்த ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்.
இன்று மாலை 7 மணிக்கு மேலாக பூஜை அறையை வழக்கம் போல அலங்காரம் செய்து, விளக்குகளை ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு தாம்பூல தட்டில் வாங்கி வந்த நவ தானியங்களை கொட்டி பரப்பி அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வாராகியை மனம் உருக வேண்டி கடன் தீர பிரார்த்தனை வைத்தால் நிச்சயம் கடன் சுமை தீரும்.
தீபம் எரிந்து முடிந்த பிறகு மறுநாள் அந்த நவதானியங்களை எடுத்து காக்கை குருவிகளுக்கு பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடலாம். இது முதல் பரிகாரம் உங்கள் வீட்டில் வராகியின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் வாராகி நினைத்து இந்த விளக்கு ஏற்றுபவர்களுக்கு கடன் சுமை நிச்சயம் குறையும். நவகிரகங்களால் வரக்கூடும் பாதிப்புகளும் விலகும்.
அடுத்து வெள்ளிக்கிழமை காலை நேரத்திலும் பஞ்சமி திதி இருக்கிறது. நாளை 20-12-2024 வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வழக்கம் போல வாசல் கோட்டி கோலம் போட்டு நிலை வாசலில் 2 விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி ‘ஓம் வாராஹி தாயின் பாதங்கள் பணிவோம்’ என்று சொல்லி உங்கள் வருமானம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொண்டால், வருமானம் பல மடங்கு உயர்வதை கண்கூடாக பார்ப்பீர்கள்.
இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க வாராகி சூட்சும வழிபாடு
மற்ற நாட்களில் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளை மூன்று வாரம் செய்ய வேண்டும், ஐந்து வாரம் செய்ய வேண்டும் அல்லது தொடர்ந்து செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த மார்கழி மாதத்தில் நீங்கள் ஒரு முறை வழிபாட்டை மேற்கொண்டாலே அது பல்லாயிரம் முறை பரிகாரம் செய்த பலனை உங்களுக்கு கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த மார்கழி மாதம் வாராஹியை வழிபடக்கூடிய சிறந்த நாள் இது. மேல் சொன்ன மிக மிக எளிமையான முறையில் வாராகி வழிபடுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.