மார்கழி வெள்ளி வாராகி வழிபாடு

varahi2
- Advertisement -

நாளை மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. இந்த முதல் வெள்ளியில் அம்பாள் வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை தரும். அதிலும் வாழ்க்கையே போராட்டமாக நடத்திச் செல்பவர்கள், நாளைய தினம் வாராகி அன்னையை நினைத்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த ஒரு பூஜையை வீட்டில் செய்தாலே போதும். உங்கள் நரக வாழ்க்கை சொர்க்கமாக மாறிவிடும். நாளைய தினம் எளிமையாக அந்த பூஜையை நம்முடைய வீட்டில் எப்படி செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

மார்கழி முதல் வெள்ளி வாராகி வழிபாடு

வாராகி அன்னையை வீட்டில் திருவுருவப்படமாகவோ அல்லது சிலையாகவோ வைத்து வழிபாடு செய்யக்கூடிய வழக்கம் இப்போது நம்மில் பல பேர் வீடுகளில் இருக்கிறது. உங்களுடைய வீட்டில் வாராஹி தாய் திருவுருவப்படமோ, சிலையோ இருந்தால் நாளை அந்த சிலைக்கு அலங்காரம் செய்து இந்த பூஜையை செய்யுங்கள். வாராஹி அம்மனின் திருவுருவப்படம் சிலை எதுவுமே இல்லை என்பவர்களும், இந்த பூஜையை செய்யலாம். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரை வாராஹித்தாயாக நினைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நாளை வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வாசல் கூட்டி கோலம் போட்டு நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைக்கவும். பூஜை அறையை இன்றே சுத்தம் செய்து வையுங்கள். நாளைக்கு சுவாமி படங்களுக்கு பூ மட்டும் அலங்காரம் செய்துவிட்டு விளக்கு ஏற்றி வையுங்கள். ஒரு மாதுளம் பழம் இன்றே வாங்கி வைத்து விடுங்கள்.

நாளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அந்த மாதுளம் பழத்தை வெட்டி அதில் இருக்கும் முத்துக்களை மட்டும் உதிர்த்து ஒரு கிண்ணத்தில் போடணும். இதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலந்து பூஜையறையில் வராகி அம்மனுக்கு நிவேதனமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த மாதுளை பழம் எவ்வளவு குளிர்ச்சி, அந்த தேன் எவ்வளவு இனிப்பு சுவை. அந்த இரண்டு பொருட்களின் மகத்துவமும் உங்கள் வாழ்க்கையில் கலந்து விடும். அதாவது உங்கள் வாழ்க்கை போராட்டமாக இருந்தால் அது குளிர்ச்சி நிலவும். நரக வாழ்க்கை சொர்க்கமாக மாறும். கசப்பான வாழ்க்கை இனிப்பாக மாறும். இதுதான் இந்த வழிபாட்டின் தாத்பரியம்.

இப்படி நிவேதனத்தை பூஜை அறையில் வைத்து விட்டு வழக்கம் போல தீபம் தூபம் கற்பூர ஆரத்தி காண்பித்து சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து வாராகியை மனதில் நினைத்து குடும்ப வளர்ச்சிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: வைகுண்ட ஏகாதேசி அன்று விரதம் இருக்கும் முறை

பூஜை நிறைவடைந்த உடன் அந்த பிரசாதத்தை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம். உங்களால் வீட்டில் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பிரசாதத்தை கொடுக்க முடியும் என்றாலும் கொடுக்கலாம். தவறு கிடையாது. அந்த அன்னையின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கும். எளிமையான இந்த வழிபாடு உங்களுக்கு பலன் தரும் என்ற நம்பிக்கை இருந்தால் நாளை இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்யுங்கள். நன்மை நடக்கும்.

- Advertisement -