வைகுண்ட ஏகாதேசி அன்று விரதம் இருக்கும் முறை

ekadesi
- Advertisement -

இந்த வருடம் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசி எந்த நாளில் வருகிறது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எந்த நாளில் விரதத்தை தொடங்கி எந்த நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும், என்றைக்கு கண்விழிப்பது, யாரெல்லாம் சாப்பிடாமல் உபவாசம் இருந்து விரதம் இருக்கலாம். யாரெல்லாம் விரதத்தை தவிர்க்க வேண்டும், என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஏகாதேசி 2023

இந்த வருட ஏகாதேசியானது 22-12-2023 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு பிறகு ஏகாதசி திதி தொடங்குகிறது. 23-12-2023 காலை 6.27 மணி வரை ஏகாதேசி திதி இருக்கிறது. அதன் பிறகு துவாதசி திசி தொடங்கி, 24-12-2023 ஆம் தேதி காலை 7:13 வரை துவாதசி திதி இருக்கிறது.

- Advertisement -

எந்த நாளில் ஏகாதசி விரதம் இருப்பது?

22ம் தேதி நமக்கு காலை 10.00 மணிக்கு பிறகு ஏகாதேசி திதி துவங்க இருப்பதால், வெள்ளிக்கிழமை மதியம் உணவு சாப்பிட்டு முடித்து விடுங்கள். நீங்கள் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருப்பதாக இருந்தால், நாளை மதியம் உணவை முடித்துவிட்டு விரதத்தை தொடங்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் 22 ஆம் தேதி மாலை எளிமையான உணவை சாப்பிட்டு தூங்கி விடலாம்.

23.12.2023 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி அளவில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும். நீங்க என்ன செய்யணும். சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு முன்னாடியே எழுந்து சுத்தபத்தமாக குளித்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி விரதத்தை தொடங்கணும். இந்த சொர்க்கவாசல் திறப்பு எல்லா டிவிகளிலும் நேரடியாக ஒளிபரப்பாகப்படும். அதை பார்க்க வாய்ப்பு கிடைப்பவர்கள் பார்த்துவிட்டு அன்றைய நாள் விரதத்தை தொடங்குங்கள். சனிக்கிழமை நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் இருக்கலாம். ஒரு சொம்பு தண்ணீரில் துளசி இலைகளை போட்டு, அந்த துளசி தீர்த்தத்தை குடித்து வாருங்கள்.  எவ்வளவு தண்ணீர் உங்களுக்கு தேவையோ அந்த தண்ணீரை குடித்து விரதத்தை கடைப்பிடியுங்கள்.

- Advertisement -

ஏகாதேசி கண் விழிக்கும் நேரம்

23ஆம் தேதி சனிக்கிழமை இரவு தான் கண் விழிக்க வேண்டும். சினிமா படம் பார்த்து அல்லது வேறு ஏதாவது பொழுதுபோக்கு செய்து கண்விழிக்க கூடாது. ஏகாதசி இரவு பரமபதம் விளையாடி கண் விழிப்பார்கள், அல்லது பெருமாள் பாடல்கள் பாடுவது பெருமாள் கதைகள் கேட்பது, பெருமாள் திரைப்படங்கள் பார்ப்பது போன்ற விஷயங்களில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.

24 ஆம் தேதி திங்கட்கிழமை 7:00 மணி வரை தான் நமக்கு துவா துவாதசி திதி இருக்கிறது. ஆகவே 23ஆம் தேதி இரவு முழுவதும் கண்விழித்து விட்டு, 24 ஆம் தேதி அதிகாலையை குளித்து முடித்துவிட்டு, பூஜையறையில் விளக்கு ஏற்றி, வீட்டில் இருக்கும் பெண்கள் சமைக்க தொடங்க வேண்டும். கொஞ்சம் சீக்கிரமாகவே சமைக்க தொடங்குங்கள். விரதத்தை 24 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு முன்பாக முடித்து விட வேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் 24ஆம் தேதி 7.00 மணிக்கு முன்பாக சாப்பிட்டு விட வேண்டும். நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திக்கீரை எல்லாம் சேர்த்த சமையலை சமைத்து 24ஆம் தேதி காலை பெருமாளுக்கு படைத்துவிட்டு விரதத்தை முடித்து நீங்களும் இந்த உணவை சாப்பிட்டு விட வேண்டும். வயிறு முழுக்க சாப்பிட்டு உடனே போய் தூங்க கூடாது. இந்த 24ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு பெருமாளை வழிபாடு செய்து இந்த வருட ஏகாதேசி விரதத்தை நல்லபடியாக கடைப்பிடித்ததற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து பிறகு தூங்க செல்லுங்கள்.

யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது

கர்ப்பிணி பெண்கள், சின்ன குழந்தைகள், நோய் வாய் பட்டவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் விரதம் இருக்க வேண்டாம். ஏகாதசி நாளில் மாதவிடாய் ஆன பெண்களும் விரதம் இருக்கலாம். பூஜையறைக்கு கோவிலுக்கு செல்லக்கூடாது அவ்வளவுதான். இந்த வருட ஏகாதேசி அன்று மேல் சொன்ன விஷயங்களை முறையாக பின்பற்றி பெருமாளின் அருளை பெற வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -