மகாலட்சுமியை வரவேற்க நிலை வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்

kolam1
- Advertisement -

மார்கழி மாதம் நிலை வாசலில் வெறும் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதை விட, மாட்டு சாணம் தெளித்து கோலம் போடுவதால் தான் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் அதற்கெல்லாம் இப்போது வழி கிடையாது. நம்மில் எல்லோருக்கும் இந்த மாட்டு சாணம் கிடைப்பது இல்லை.

அப்படியே கிடைத்தாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி இருப்பவர்கள், இந்த சாணத்தை வாசலில் தெளிக்க முடியாது என்ன செய்வது. இந்த காலத்துக்கு ஏற்றது போல நம்முடைய சம்பிரதாய முறைகளை சுருக்கி ஒரு வழி உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது. அது என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.

- Advertisement -

நீங்களும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். உங்கள் வீட்டிற்கும் இந்த மார்கழி மாதத்தில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த தண்ணீரை வாசலில் தெளித்தால், பசு சானத்தை வீட்டு வாசலில் தெளித்த பலனும் நமக்கு கிடைக்கப் போகுது.

மார்கழி வெள்ளியில் நிலை வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்

நீங்க கீழ் வீட்டில் தான் குடி இருக்கீங்க. வாசல் தெளித்து கோலம் போட முடியும் என்றால், அந்தத் தண்ணீரில் இந்த பொருளை சேருங்க. பசு சானம் கிடைக்கவில்லையா, கடைகளில் இப்போது வறட்டி கிடைக்கிறது. அந்த வறட்டியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஹோமங்கள் நடத்தும் போதே இந்த வரட்டியை பயன்படுத்துவார்கள்.

- Advertisement -

அதுவும் நாட்டுப்பசு வைத்திருப்பவர்கள் வீட்டில் இந்த வரட்டியை வாங்கினால் ரொம்ப நல்லது. வாங்கி வைத்த வட்டியில் இருந்து ஒரு சின்ன துண்டை உடைத்து வாசல் தெளிக்கும் தண்ணீரில் போட்டு கலந்து வாசல் தெளித்துக் கொள்ளலாம். இரண்டு வறட்டி வாங்கினாலே மார்கழி மாதம் முழுவதும் போதும். அப்படி இல்லை, உங்களுக்கு கோமியம் கிடைக்குமா. அந்த கோமியத்தை எடுத்து வந்து நிலை வாசலில் தெளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக கலந்து வாசல் தெளித்து கோலம் போடுங்க.

இந்த இரண்டுமே உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வாசல் தெளிக்கும் தண்ணீர் கொஞ்சமா மஞ்சள் தூளை போட்டு கலந்து நிலை வாசலில் தெளித்து கோலம் போடுவது ரொம்ப ரொம்ப நல்லது. சரி எங்கள் வீட்டிற்கு வெளியே நிலை வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட முடியாது. நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கின்றோம். நாங்கள் என்ன செய்வது.

- Advertisement -

நீங்களும் அந்த நிலை வாசல் படியை தண்ணீர் போட்டு தினமும் துடைப்பீர்கள் அல்லவா. அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம். உங்களுக்கு இந்த வறட்டி கிடைக்கும் என்றால், அதை தரை துடைக்கும் தண்ணீரிலேயே கொஞ்சமாக வரட்டி தூள் போட்டு தரையைத் துடையுங்கள்.

மகாலட்சுமிக்கு சொந்தமான பசுமாட்டில் இருந்து எடுக்கப்பட்ட எதாவது ஒரு பொருளை சேர்த்து, அந்த தண்ணீரைக் கொண்டு நிலை வாசலை சுத்தம் செய்வது அத்தனை லட்சுமி கடாட்சம். நீங்கள் கூப்பிட்டாலும் கூப்பிடவில்லை என்றாலும் இந்த தண்ணீரை நிலை வாசலில் தெளித்தாலே மகாலட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வருகை தந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: மார்கழி வெள்ளி வாராகி வழிபாடு

இதுவரை உங்கள் கையில் தங்காத பணம் கூட இந்த தண்ணீரை வாசல் தெளித்து கோலம் போட்ட பின் தங்கும். இந்த மார்கழி மாதத்தில் மேல் சொன்ன விஷயங்களை முடிந்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -