- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழியில் பெருமாள் வழிபாடு

மார்கழியில் பெருமாள் வழிபாடு

- Advertisement -

இது மார்கழி மாதம். பெருமாள் வழிபாட்டிற்கு இந்த மாதம் மிக மிக உகந்த மாதம். இந்த மார்கழி மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி திருநாளும் வரவிருக்கிறது. இந்த மார்கழியில் எல்லோராலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கோவிலுக்கு சென்று, பெருமாளை வழிபாடு செய்ய முடியாது. இருப்பினும் பெருமாளின் அருளை நாமும் பரிபூரணமாக பெறவேண்டும் என்றால், வீட்டில் இருந்தபடியே அந்த பெருமாளை எப்படி வழிபாடு செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

மார்கழியில் பெருமாள் வழிபாடு

மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். வைகுண்டத்தில் பெருமாளின் பாதத்தில் இடம் கிடைத்தால் மட்டும் போதும் என்று எண்ணக்கூடிய வர்களாக நீங்கள் இருந்தால், உங்களுடைய கஷ்டங்கள் இந்த பூலோகத்திலேயே உங்களை கடந்து செல்ல வேண்டும் என்றால், இந்த மார்கழி மாதத்தில் ஒரே ஒரு நாளாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாளை வீட்டில் இருந்தபடியே இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள் போதும்.

- Advertisement -

மார்கழியில் அதிகாலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். வாசல் கூட்டி கோலம் போட்டு மகாலட்சுமியை நினைத்து நிலை வாசலில் தீபம் ஏற்றி வையுங்கள். பூஜை அறையில் பெருமாளின் திருவுருவப்படம் இருக்கும் அல்லவா. அதை எடுத்து சௌகரியமாக வரவேற்பறையிலோ அல்லது பூஜை அறையிலோ இடம் இருந்தால், ஒரு நாற்காலி போட்டு அந்த இடத்தில் பெருமாள் திருவுருவ படத்தை நிற்க வைத்து, துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அதாவது பெருமாளை நீங்கள் இப்போது வீட்டிலேயே வளம் வரப்போகிறீர்கள். பெருமாளை சுற்றி வரும் அளவுக்கு, பூஜை அறையில் இருக்கும் பெருமாள் படத்தை எடுத்து வசதியாக ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

27 பூக்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை பெருமாளை வளம் வந்து பெருமாளுக்கு முன்பாக ஒரு பூவை வையுங்கள். மறுமுறை வலம் வரும்போது இன்னொரு பூவை வையுங்கள். இப்படி 27 சுற்றி ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை சொல்லி சுற்ற வேண்டும். இப்படி பெருமாள் வழிபாட்டை விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும். ஆனால் நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு விஷ்ணுபதி புண்ணிய காலம் நாள் வரும் வரை காத்திருக்க முடியாது.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்தால் கோடி புண்ணியம். அதேபோல தான் இந்த மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில், பெருமாளை வீட்டில் இருந்தபடியே 27 முறை வலம் வந்து, வழிபாடு செய்தாலும் நமக்கு புண்ணியம் கிடைக்கும். வாழ்வில் இருக்கும் பணக்கஷ்டம், மன கஷ்டம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்.

- Advertisement -

எங்கள் வீட்டு பக்கத்தில் கோவில் இல்லை. தினமும் கோவிலுக்கு செல்வதற்கு முடியாதவர்கள் எல்லாம் ஒரே ஒரு நாள் வீட்டில் இருந்தபடியே மேலே சொன்ன முறைப்படி பெருமாளை வழிபாடு செய்து பாருங்கள். ஒரு கோரிக்கையை பெருமாளிடம் வைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் மார்கழி முடிவதற்குள் நல்ல வீடியோ காலம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் சுமை தீர தீப வழிபாடு

இந்த மார்கழி மாதம் என்று மட்டுமல்ல, உங்களுக்கு எப்போது கஷ்டம் வரும்போது வேண்டும் என்றாலும், மேலே சொன்ன இந்த வழிபாட்டை செய்யலாம், ஏனென்றால் கஷ்டம் வரும் போது, நல்ல நாளை தேடிக் கொண்டு காத்திருக்க முடியாது, கஷ்டம் வரும் நாளில் இறைவனை வழிபாடு செய்வது தானே வழக்கம், கஷ்டத்திற்கு தீர்வு காணும் வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்ற, இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்