மார்கழி மாதத்தில் செய்யவே கூடாத 4 தவறுகள் என்னென்ன? வாழ்வில் வளம் பெற மார்கழி மாதம் முழுவதும் செய்ய வேண்டியது என்னென்ன?

kolam
- Advertisement -

இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக சொல்லப்படும் மார்கழி மாதம், இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. அதாவது வருகின்ற 16.12.2021 வியாழக்கிழமை அன்று மார்கழி முதல் நாள். மார்கழி மாதம் முழுவதிலும் நாம் எந்தெந்த தவறுகளை செய்யக் கூடாது என்பதை பற்றியும், மார்கழி மாதம் முழுவதும் என்னென்ன விஷயங்களை நாம் கடைப்பிடித்து வந்தால் நம் வாழ்வில் வளம்பெற நல்ல பலன்களை பெற முடியும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே சாதாரண நாட்களில் நாம் இறை வழிபாடு செய்வதன் மூலம் கிடைக்கக் கூடிய பலனை விட, இந்த மார்கழி மாதத்தில் இறை வழிபாடு செய்தால் அதிக பலனை பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

praying-god1

அதாவது சாதாரண நாட்களில் ஒருநாள் இறைவனை வழிபடும் போது அந்த நாள் வழிபட்ட பலனை மட்டும் தான் நம்மால் பெறமுடியும். அதுவே மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஒருநாள் இறைவனை வழிபாடு செய்தால், ஒரு வருடம் இறைவழிபாடு செய்த பலனை நமக்கு கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக வரக்கூடிய மார்கழி மாதத்தில் யாரும் இறை வழிபாடு செய்வதை கூடுமானவரை ஒரு நாள் கூட தவற விடாதீங்க, என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

மார்கழி மாதம் என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது கோலம் தான். எக்காரணத்தைக் கொண்டும் மார்கழி மாதத்தில் இரவு நேரத்தில் கோலம் போடக்கூடாது. அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசல் கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்றதுமே வாசலில் பெரிய கோலம் தான் போட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உங்களுக்கு நேரம் இல்லை என்றால், சிறிய கோலம் போட்டாலும் அது நன்மை தரும். அந்த கோலத்தை, கோல மாவில் போடாமல் அரிசி மாவில் போட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

kolam4

அடுத்தபடியாக மார்கழி மாதம் யாருமே விதை விதைக்க கூடாது. புதியதாக செடி நட கூடாது. ஏனென்றால் இந்த குளிர்காலத்தில் நாம் விதைத்த விதையோ செடியோ துளிர்த்து வளராது. அந்த செடி பட்டு போனால் அதுவும் ஒரு பாவம் தானே. இந்த மார்கழி மாதத்தில் யாரும் இந்த தவறையும் செய்யாதீர்கள்.

- Advertisement -

மார்கழி மாதத்தில் யாரும் சூரிய உதயத்திற்கு பிறகு கட்டாயமாக தூங்கக்கூடாது. அதாவது 6:00 மணிக்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு வீட்டிலிருந்தபடியோ அல்லது கோவிலுக்கு சென்றோ இறைவழிபாடு செய்ய வேண்டும். சரியாகச் சொன்னால் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து குளித்து வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகாலையில் கண் விழிக்க முடியாது என்று சொல்லுபவர்கள், 6 மணிக்கு முன் வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்திருக்க வேண்டும்.

deepam

முடிந்தால் வீட்டு அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் பஜனையில் கலந்து கொள்வது மிகவும் நல்லது. முடிந்தவரை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிறிய கோவிலுக்கு இந்த மார்கழி மாதத்தில் ஒரு நாள் அபிஷேகம் செய்து வைக்கலாம்.

vinayagar-abishegam

மார்கழி மாதம் முழுவதும் நிலை வாசலில் கோலம் போட்ட பின்பு நிலை வாசல் படியில் தீபம் ஏற்றி வைப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நிலை வாசலில் தீபம் ஏற்றி விட்டு, அதன் பின்பு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். மேல் சொன்ன விஷயங்களை மார்கழி மாதத்தில் நம்பிக்கையோடு கடைப்பிடித்து வருபவர்களுக்கு நிச்சயமாக வளமான வாழ்வும், எதிர்காலமும் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -