மார்கழி முதல் நாள் வீட்டில் வைக்க வேண்டிய செடி

thulasi
- Advertisement -

நாம் எல்லோருக்கும் தெரியும். துளசி வழிபாட்டிற்கு மிக மிக உகந்தது இந்த மார்கழி மாதம். சில பேர் வீடுகளில் இந்த துளசி செடி இருக்கும். சில பேர் வீடுகளில் துளசி செடி வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இதுநாள் வரை வாங்கி இருக்க மாட்டார்கள். அதற்கான நேரமும் காலமும் வந்துவிட்டது. நாளை மார்கழி மாதம் முதல் நாள். நாளைய தினம் ஒரு துளசி செடியை வாங்கி உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தால், அந்த மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்குள் வந்ததாக அர்த்தம்.

உங்களுடைய வீட்டில் ஏற்கனவே துளசி செடி இருந்தால், நீங்கள் புதுசாக செடி வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த வீட்டில் இருக்கும் பழைய செடிக்கு பூஜை செய்யலாம். ஒரு வேலை செடி இல்லை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் நாளைய நாளைய நாளை தவறவே விடாதீங்க.

- Advertisement -

அழகான தொட்டியில், அழகான ஒரு துளசி மாதாவை உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. துளசி மாதா, மகாலட்சுமி தேவி, விஷ்ணு பகவான், உங்க வீட்டுக்குள் வந்ததாக அர்த்தம். இதைக் கொண்டு வந்து வீட்டிற்கு உள் தான் வைக்க வேண்டுமா. கிடையாது. முதலில் வாங்கி வந்த செடியை நிலை வாசலுக்கு உள்ளே கொண்டு வாருங்கள்.

பிறகு வீட்டிற்கு வெளியே எந்த இடம் உங்களுக்கு வசதியாக இருக்குமோ, அந்த இடத்தை தேர்ந்தெடுத்து இந்த துளசி செடியை வைத்து விடுங்கள். துளசி செடியை வாங்கி வைத்தால் மட்டும் போதாது. துளசிச் செடியை பராமரிக்க வேண்டும். பராமரிக்காமல் துளசி செடியை ஒரு ஓரமாக அப்படியே போட்டு வைப்பது ரொம்ப ரொம்ப தவறு.

- Advertisement -

துளசி செடிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, தினமும் காலை குளித்துவிட்டு, அந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீரை உங்கள் வலது கையில் ஊற்றி, வலது கையில் பட்ட தண்ணீர் அந்த துளசி செடிக்கு போக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மார்கழி மாதம் பிறக்குது.

காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே துளசி செடிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து ஒரே ஒரு மண் அகல் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, துளசி செடியை முடிந்தால் மூன்று முறை வளம் வந்து குடும்பம் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வையுங்களேன். அது போதும்.

- Advertisement -

உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் செல்வ வளத்தில் உயர்ந்து கொண்டே செல்லும். அந்த மகாலட்சுமி போதும் போதும் என்ற அளவுக்கு பொன் பொருள் புகழை உங்களுக்கு வாரி வாரி கொடுப்பாங்க என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த மார்கழி மாதம் வாய்ப்பு கிடைத்தால் துளசி செடியை வாங்கி வீட்டில் வைத்து, இந்த மாதம் முழுவதும் இப்படி வழிபாடு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை வளர்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு.

மார்கழி மாதம் முடிந்த பிறகு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கூட அந்த துளசி செடிக்கு ஒரு விளக்கு ஏற்றி தூபம் காட்டுங்க நல்லது. அடுத்த மார்கழி மாதத்திற்குள் உங்கள் குடும்ப வளர்ச்சியை பார்த்து நீங்களே பிரமித்து போவீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -