நாளை வளர்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு.

varahi1
- Advertisement -

நாளைய தினம் மார்கழி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இதோடு சேர்த்து வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு இந்த நாள் ஒரு பெரிய வரப்பிரசாதம். இதுநாள் வரை நீங்கள் வராகி அன்னையை வழிபாடு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.

நாளை வாராகி அன்னையை மனதார நினைத்து பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்தால், உங்களுக்கு சொந்த வீடு மட்டுமல்ல, பணம், பொன், பொருள், சேர்க்கையும் அதிகரிக்கும். நாளை மார்கழி மாதத்தில், பிரம்ம முகூர்த்த நேரத்தில், வாராகி அன்னையை எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

மார்கழி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு

நாளை மார்கழி மாதம் என்பதால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை நீங்கள் செய்துவிட வேண்டும். அதாவது நாளை அதிகாலை வேலை 4.00 மணியிலிருந்து 5.30 குள் இந்த வேண்டுதலை வாராகித் தாயிடம் வைக்க வேண்டும். பூஜையறையில் வழக்கம் போல விளக்கு ஏற்றி விடுங்கள். நிலை வாசலிலும் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

வாராகி அன்னைக்கு ஒரு டம்ளரில் பானகம் நெய்வேதியமாக வைத்தாலும் போதும். இல்லை என்றால் ஒரு மாதுளம் பழம் வாங்கி நிவேதனம் வையுங்கள். செல்வ கடாட்சம் அதிகரிக்கும். அடுத்தபடியாக இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருள் நவதானியம், வெல்லம். ஒரு கிண்ணத்தில் நவதானியத்தை கொட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். நவதானியம் எல்லாம் சேர்ந்தது போல ஒரு பாக்கெட் விற்கும். அதை வாங்கிக்கோங்க போதும்.

- Advertisement -

கட்டி வெல்லம், அச்சு வெல்லம், பனைவெல்லம், எது வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். கட்டியாக இருக்கக்கூடிய வெல்லத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சம் பழம் அளவு வெல்லக்கட்டி எடுத்துக்கோங்க. அதை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு.

உங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறது சொந்த வீடு வேண்டும் என்ற கோரிக்கையா, சொந்த நிலம் வாங்க வேண்டுமா அல்லது வருமானம் அதிகரிக்க வேண்டுமா, அல்லது ஏதாவது வண்டி வாகனம் வாங்க கூடிய ஆசை இருக்குதா, தங்கம் வாங்கும் யோகம் வேண்டுமா, ஏதாவது புதுசாக பொருள் வாங்க வேண்டும் என்ற ஆசை, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான வேண்டுதலை வைக்க வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் இது வளர்பிறை பஞ்சமி திதி. ஆகவே கஷ்டத்தை சொல்லாதீங்க. உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு என்ன தேவையோ அதை வாராகித் தாயிடம் வேண்டுதலாக வைத்து, கையில் இருக்கும் வெல்ல கட்டியை அந்த நவதானியத்தின் மேலே வைத்து விடுங்கள்.

கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அந்த நவதானியமும் வெல்ல கட்டியும் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த நவதானியத்தை எடுத்து தண்ணீரில் கொட்டி ஊற வையுங்கள். திங்கள்கிழமை காலை கொண்டு போய் ஒரு பசு மாட்டிற்கு இதை சாப்பிட கொடுத்து விட வேண்டும்.

பசுவுக்கு அந்த நவதானியத்தை வைக்கும் போது இந்த வெவ்லத்தையும் போட்டு வச்சிடுங்க. மார்கழி மாதம் முதல் நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாராகி அன்னையை இப்படி வழிபாடு செய்தால், உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மேல் வளர்ச்சி வந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக மார்கழி மாதத்தில் பாட வேண்டிய திருப்பாவை பாடல் வரிகள்

உங்க வீட்டில் வராஹி அம்மன் திருவுருவப்படமே வைக்கவில்லை என்றாலும் வாராகியை மனதில் நினைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். நீங்கள் வேண்டிய வேண்டுதலை அந்த வாராகி அன்னை சீக்கிரம் நிறைவேற்றி வைப்பாள். உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ, நாளை அம்பாளிடம் சொல்லுங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -