- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வத்தை வீடு தேடி வர வைக்கும் விளக்கு

குலதெய்வத்தை வீடு தேடி வர வைக்கும் விளக்கு

- Advertisement -

இன்றைய அவசர அவசரமான வாழ்க்கை சூழ்நிலையில் எல்லோரும், இறைவனை வழிபாடு செய்வதற்கே மறந்து விடுகின்றோம். அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாட்டை சுத்தமாக மறந்து விடுகின்றோம். இது குடும்பத்திற்கு கஷ்டத்தை தான் கொடுக்கும். ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக குளம் தழைத்து, செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருப்பவர்கள் தினமும் ஒரு முறை குலதெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

குலதெய்வ அருள் ஆசியை முழுமையாக பெற, செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதோடு சேர்த்து சில குடும்பங்களில் குலதெய்வத்தை கட்டி போட்டு விட்டார்கள்.

- Advertisement -

இதனால் குடும்பத்தில் ரொம்பவும் கஷ்டம் நிலவி வருகிறது, கெட்ட சக்தியின் ஆதிக்கமும் குடும்பத்தில் தலைவிரித்து ஆடுகிறது, என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் குலதெய்வத்தின் கட்டு அவிழும். நிலை வாசலில் இருக்கும் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும்.

குலதெய்வத்தின் அருள் பெற

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு தேவையான பொருள் மரிக்கொழுந்து, தேங்காய் எண்ணெய். மரிக்கொழுந்தை பொறுத்த வரை ஒரு வாசமான மூலிகை பொருள். இதற்கு எந்த தெய்வமும் வசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மரிக்கொழுந்தை எடுத்து ஒரு கல்லில் வைத்து நன்றாக நசுக்கி அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சின்ன அம்மிக்கல் இருந்தாலும் அதை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, அதில் அரைக்கலாம். காரமான பொருட்களை அம்மியில் அரைத்து இருந்தால், அந்த காரம் போகும் அளவுக்கு அம்மியை சுத்தம் செய்துவிட்டு மரிக்கொழுந்தை அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் விடக்கூடாது. வெறும் மரிக்கொழுந்தை மட்டும் அரைத்து கொஞ்சமாக விழுது தயார் செய்து கொள்ளுங்கள்.

சுத்தமான பாத்திரத்தில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி, இந்த மரிக்கொழுந்தை அதில் போட்டு லேசாக சூடு செய்து, வடிகட்டினால் வாசம் நிறைந்த மூலிகை எண்ணெய் தயார். இதை பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குலதெய்வம் உங்களுக்கு தெரியும்.

- Advertisement -

உங்கள் குலதெய்வ கோவில் வீட்டு பக்கத்தில் தான் இருக்கிறது, என்பவர்கள் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளிக்கிழமையில் இந்த எண்ணெயை கொண்டு போய் அகல் விளக்கில் ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்றி குலதெய்வ கோவிலில் வைத்து விட்டு என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

குலதெய்வம் வெகு தூரத்தில் இருக்கிறது என்பவர்கள் எப்போது குலதெய்வ கோவிலுக்கு செல்கிறீர்களோ, அப்போது இந்த எண்ணெயை கொண்டு போய் ஊற்றி விளக்கு ஏற்றி வேண்டுதல் வைக்கவும். ஒரு விளக்கு, இரண்டு விளக்கு, ஆறு விளக்கு எத்தனை விளக்கு வேண்டும் என்றாலும் ஏற்றலாம். அது உங்களுடைய விருப்பம். எங்களுடைய குலதெய்வம் எது என்றே தெரியாது.

என்பவர்கள் வீட்டிலேயே, தெரியாத குல தெய்வத்தை நினைத்து மண் அகல் விளக்கில் இந்த எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றி ‘எங்கள் குடும்ப குலதெய்வம் எது என்று எங்களுக்கு தெரியவில்லை, சீக்கிரமாக யார் ரூபத்திலாவது அந்த குலதெய்வம் எங்களுக்கு தெரிய வேண்டும்’ என்ற பிரார்த்தனையை வைத்தால், கூடிய சீக்கிரத்தில் தெரியாத உங்க குலதெய்வத்தை தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: கடனை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

இவ்வளவு அற்புதமான வேலைகளையும் செய்யக்கூடிய சக்தி இந்த மூலிகை எண்ணெய்க்கு இருக்கிறது. அந்த காலத்திலேயே சித்தர்களால் சொல்லி வைக்கப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்