- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி கிருத்திகை வழிபாடு

மார்கழி கிருத்திகை வழிபாடு

- Advertisement -

மார்கழி மாதத்திலும் அதேசமயம் 2025 ஆம் ஆண்டு வரக்கூடிய முதல் கிருத்திகை நட்சத்திரம் என்பது ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வருகிறது. அன்றைய தினம் மதியம் 3:00 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் தொடங்கி மறுநாள் அதாவது ஜனவரி 10ஆம் தேதி மதியம் 1:40 வரை இருக்கிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மார்கழி கிருத்திகை வழிபாடு

முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக கருதப்படுவது கிருத்திகை நட்சத்திரம். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் முருகப்பெருமான் என்பதால் அவர்களின் ஞாபகமாக வரக்கூடிய இந்த கிருத்திகை நட்சத்திர நாளன்று யாரொருவர் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ? அவர்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும் முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருத்திகை நட்சத்திரம் மார்கழி மாதத்தில் வரும் பொழுது அதற்கு கூடுதல் சிறப்பு இருக்கிறது. அன்றைய நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த கிருத்திகை வழிபாட்டை வீட்டில் செய்பவர்கள் ஒன்பதாம் தேதி மாலை 6:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள், பத்தாம் தேதி பிரம்ம முகூர்த்த நேரம், காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள், மதியம் 12:30 மணியிலிருந்து 1:30 மணிக்குள் இந்த நேரங்களில் எந்த நேரம் தங்களுக்கு வசதியான நேரமோ அந்த நேரத்தில் செய்யலாம். விரதம் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒன்பதாம் தேதி அன்று விரதம் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக வைகுண்ட ஏகாதசி வருகிறது. அன்றைய நாளும் விரதம் இருப்போம் என்பவர்கள் வைகுண்ட ஏகாதசி முடிந்த பிறகு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். வழிபாட்டை மேற்ச்சொன்ன நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் செய்யலாம்.

இதற்கு வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் சிலை அல்லது வேல் வேண்டும். சிலை அல்லது வேலிற்கு சுத்தமான தேனால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு நெய்வேத்தியமாக தயிர் சாதத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வீட்டில் வேல், முருகனின் சிலை இல்லை என்பவர்கள் முருகனின் படத்திற்கு முன்பாக தயிர் சாதம் வைப்பதோடு தேனையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக நட்சத்திர கோலம் போட்டு ஆறு வெற்றிலைகளை வைத்து அதன் மேல் ஆறு அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்துக் கொண்டு “ஓம் சரவணபவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்ற முருகப்பெருமானை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் அதிக பலனை தரும்.

இதையும் படிக்கலாமே:நிலை வாசலுக்கு ஏற்ற சுவாமி படம்

இந்த முறையில் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருப்பவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அந்த வேண்டுதலை முருகப் பெருமான் அருள்வார் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது. முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் மேற்கொண்டாவது முருகப்பெருமானின் அருளை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்