வீடு வளம் பெற மார்கழி மாத வழிபாடு

markazhi matha vazhipadu
- Advertisement -

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களும் ஒவ்வொரு விஷயங்களுக்காக நம்முடைய முன்னோர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் சில மாதங்கள் வழிபாட்டிற்கென தனியாக ஒதுக்கி இருக்கிறார்கள். அதில் இந்த மார்கழியானது தனி சிறப்பு மிக்க மாதம். அதிலும் இந்த மார்கழி மாதமானது தேவர்களுக்கே வழிபாட்டுக்குரிய காலமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய மாதத்தில் நாமும் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பது நம் முன்னோருடைய நம்பிக்கை.

ஆகையால் தான் நம் முன்னோர்கள் மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு வந்தார்கள். கோவில்களில் பஜனைகள் செய்வதும், இறைவனை ஆராதனை செய்வதும் என முழுக்க முழுக்க வழிபாட்டிலே நேரத்தை செலவழித்து குடும்பத்தை வளமாக வாழ வழி வகுத்து கொண்டார்கள். அப்படியான இந்த மாதத்தில் நாம் செய்யும் ஒரு வழிப்பாடும் நம்முடைய குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மார்கழி மாத வழிபாடு

இந்த மார்கழி மாதம் முழுவதும் தவறாது பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். அதற்கு காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு சாணம் கிடைத்தால் கரைத்து வாசலில் தெளிக்கலாம். அது கிடைக்காத பட்சத்தில் கொஞ்சம் மஞ்சள் கலந்த தண்ணீரால் வாசலை தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து பச்சரிசி மாவில் வாசலில் கோலம் போட வேண்டும். இது மிக மிக முக்கியம். இந்த பச்சரிசி மாவில் போடுவது போல வேறு புண்ணியங்களை நம் வாழ்க்கையில் சேர்க்கவே முடியாது. அரி ஹரி என்பது பெருமாளையும் சி என்பது சிவனையும் குறிக்கும். இந்த இருவரும் ஒன்று சேர்ந்து நாம் இல்லத்திற்கு வர கட்டாயமாக அரிசி மாவில் கோலம் போட வேண்டும். அதுமட்டுமின்றி இந்த அரிசியை உண்ணும் எறும்புகள் நம் குடும்பம் என்றென்றைக்கும் தழைத்து வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்.

- Advertisement -

அடுத்து வீட்டு நிலைவாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு இரண்டு மண்ணாளான அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி, பஞ்சி திரி இரண்டையும் ஒன்றாக திரித்து போடுங்கள். அத்துடன் இந்த நெய்யில் அண்ணாச்சி பூ (சமையலுக்கு பயன்படுத்துவது) ஆறு முத்துக்களை உடைய அண்ணாச்சி பூவை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இத்துடன் சந்தன வாசம் உள்ள ஊதுபத்திகளை வாசலில் பொருத்தி வைக்க வேண்டும். இதில் சேர்க்கும் நெய், பஞ்சுத்திரி, தாமரைத்தண்டு இவையெல்லாம் மகாலட்சுமி தாயார் அனுகிரகத்தை நமக்கு பெற்றுத் தரும். அதே போல் இதில் சேர்க்கும் ஆறு மொட்டுக்கள் உடைய அண்ணாச்சி ஆறு என்பது சுக்கிரனுடைய ஆதிக்கம் நிறைந்த எண். சந்தனமானது ராகுவிற்கு உகந்தது இத்தனையும் சேர்த்து நாம் ஏற்றப்படும் இந்த தீபம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: துர் சக்திகளை விரட்டும் தூபம்

இவையெல்லாம் செய்த பின் நிலை வாசலில் தொட்டு வணங்கிய பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து எப்போதும் போல உங்களுடைய பணிகளை தொடங்கலாம். மார்கழி மாதம் முழுவதும் இந்த ஒரு வழிபாட்டு முறையை தவறாது கடைபிடிக்கும் இல்லத்தில் அரியும் சிவனும் இணைந்து வருவதுடன் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் ராகு என அனைத்து தெய்வங்களையும் நம் இல்லம் தேடி வரவைத்து நல்ல முறையில் நம் வாழ அவர்களின் அருளைப் பெறலாம்.

- Advertisement -