- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிவ கடாட்சம் கிடைக்க மார்கழி பௌர்ணமி வழிபாடு

சிவ கடாட்சம் கிடைக்க மார்கழி பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

பௌர்ணமி என்றாலே அது மிகவும் சிறப்புக்குரியது. அதிலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது அதீத சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. இதற்கு மார்கழி மாதம் ஒரு காரணமாக இருந்தாலும் அன்றைய தினத்தில் திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்து வரும் என்பதால் அதற்கு கூடுதல் சிறப்பு இருக்கிறது. பௌர்ணமி நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் அல்லவா? அதே போல் தான் திருவாதிரை நட்சத்திர நாளிலும் சிவபெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். திதியும் நட்சத்திரமும் சிவபெருமானுக்குரியதாக இருப்பதால் இந்த மார்கழி பௌர்ணமி என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் சிவ கடாட்சத்தை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு சூழ்ச்சுமத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மார்கழி பௌர்ணமி வழிபாடு

ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது எப்படி அம்பாளுக்கு விசேஷமான ஒரு நாளாக திகழ்கிறதோ அதேபோல்தான் சிவபெருமானுக்கும் உகந்த நாளாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருந்தாலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக அளவில் சிறப்புகள் இருக்கிறது. இதற்கு காரணம் அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரம் வரும். அனைத்து நடராஜர் ஆலயங்களிலும் சிவபெருமானுக்கு பலவிதமான அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்யும் முறை என்பது அன்றைய நாளில் நடைபெறும். அதோடு மட்டுமல்லாமல் பலரும் விரதம் இருந்து திருவாதிரை களியை சிவபெருமானுக்கு படைத்து வழிபாடும் செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அன்றைய நாளில் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சில சூட்சமத்தை பின்பற்றும் பொழுது சிவபெருமானின் அருள் கடாட்சத்தை பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

பொதுவாக கிரிவலம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். யாரையும் திட்டக்கூடாது. யாரிடமும் கடினமாக பேசக்கூடாது. காலில் செருப்பு அணிந்து கொண்டு செல்லக்கூடாது. சிவ நாமத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.தங்களால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். தங்களால் இயன்ற பொருட்களை தானமாக தர வேண்டும். அவசரப்பட்டு செல்லாமல் மெதுவாக செல்ல வேண்டும். கிரிவலம் செல்லும் பாதையில் இருக்கக்கூடிய சிவலிங்கங்களை தரிசனம் செய்து கொண்டே செல்ல வேண்டும். இப்படி பல விதமான வழிமுறைகள் இருக்கின்றது.

இந்த வழிமுறைகளோடு ஒவ்வொரு மாதத்தின் சிறப்புக்கு ஏற்றவாறு சில சூட்சமமான பொருட்களை நாம் உடனெடுத்துச் சென்றோம் என்றால் நமக்கு சிவபெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் இந்த மார்கழி மாதத்தில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருளாக திகழ்வது சிவபெருமானுக்குரிய வில்வ இலைகள். வீட்டில் இருந்து கிளம்பும்பொழுது சிறிது வில்வ இலைகளை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். எந்த இடத்தில் இருந்து நீங்கள் கிரிவலம் தொடங்க ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுது கையில் அந்த வில்வ இலைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கிரிவலம் முடியும் வரை அந்த வில்வ இலைகள் உங்களுடைய கையிலே இருக்கட்டும்.

- Advertisement -

பிறகு இதை பத்திரமாக திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கோ சிவலிங்கத்திற்கோ முன்பாக வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து இந்த வில்வ இலைகளை எடுத்து கால் படாத இடத்திலோ செடிகளிலோ போட்டு விட வேண்டும். இந்த முறையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று நாம் கிரிவலம் வந்தோம் என்றால் சிவபெருமானின் அருளை நம்மால் எளிதில் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:போகி கொளுத்தும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

இது ஒரு சிறிய செயல்தானே என்று நினைக்காமல் அதை முழு நம்பிக்கையுடன் பக்தியடனும் செய்தோம் என்றால் அதன் பலன் நமக்கு அதிக அளவில் கிடைக்கும். இதற்கு சிவபெருமானின் புராணங்களிலேயே பல உதாரணங்கள் இருக்கின்றது. முழு மனதுடன் இந்த ஒரு பொருளை கையில் எடுத்துக் கொண்டு கிரிவலம் செல்லுங்கள், சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்