ஜூன் 2, 3 கடகம், ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் மற்றும் புத பகவான்! 12 ராசிகளுக்கும் கொடுக்க இருக்கும் சாதக பாதக துல்லிய பலன்கள் என்னென்ன? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

budhan-sevvai-astro

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகங்கள் பெயர்ச்சியாகி கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிரகம் பெயர்ச்சி செய்யும் பொழுதும் 12 ராசிக்காரர்களுக்கும் நடைபெறும் பலன்களில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்கிறது ஜோதிடம். அந்த வகையில் ஜூன் 2ஆம் தேதி இன்று காலை 7:17 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி இருக்கின்றார். அதேபோல நாளை ஜூன் 3ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 1:34 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு புத பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் நடைபெற இருக்கும் சாதக, பாதக பலன்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Planets

மேஷம்:
Mesham Rasiஜூன் மாதத்தில் நடக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகளில் செவ்வாய், புதன் பெயர்ச்சியும் ஒன்றாகும். இப்பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்திலும் விவேகத்திலும் நற்பலன்கள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற தெளிவு பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறையும். எதிலும் திசை திரும்பாமல் கடிவாளம் போட்டது போல இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி உங்களுக்குத்தான்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சிகளால் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான உங்களுடைய பொறுப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்ப நபர்களுடன் பேசும் பொழுது முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இது சிறந்த காலம் அல்ல. பெற்றோர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெரியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். தொழிலில் பேச்சைக் குறைத்து செயலில் கவனத்தை செலுத்தினால் லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நற்பலன்களை கொடுக்க இருக்கிறது. குடும்பத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை அதிகரிக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியால் நற்பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், சுபகாரிய நிகழ்ச்சிகளும் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்த்தெரிந்து வீர நடை போடுவீர்கள். பகைவர்கள் தொல்லை ஒழிந்து நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணப் பரிவர்த்தனையில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்க வல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. புத்தி காரகன் ஆக இருக்கும் புத பகவான் பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு தெளிவாகச் சிந்திக்கும் திறனைக் கொடுக்கும் அமைப்பு இருக்கும். மற்றவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உங்களை திசை திருப்ப முடியாது. சமயோஜிதமாக செயல்படுங்கள்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சிகள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். செவ்வாய் பெயர்ச்சியால் மனவலிமை அதிகரித்து காணப்படும். தோல்விகளை கண்டு துவண்டு போகாமல் வெற்றியை நோக்கி மீண்டும் எழுந்து பயணிப்பீர்கள். நீங்கள் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் கொண்டவர்களாக இருந்தால் புதன் வழிபாடு செய்து பாருங்கள், முற்றிலும் நோய் தீரும் வாய்ப்பு உண்டு. பச்சைப்பயறு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தந்தையுடன் சில மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். கடின முயற்சி மற்றும் பொறுமை தேவைப்படும் நாட்களாக இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேகம் விவேகம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். மற்றவர்களிடம் பேசும் பொழுது இனிமையை கடைபிடிப்பது நல்லது. வார்த்தைகளை விட்டால் வம்புகள் வரக்கூடும். வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. சுய ஒழுக்கம் நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். எந்த வழியில் சென்றாலும் அதில் முட்கள் நிறைந்து காணப்படும் எனவே எச்சரிக்கை எப்பொழுதும் தேவைப்படும். கூட்டாளிகளுடன் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிறிது நாட்களுக்கு பணத்தை கடன் பெறுவது அல்லது கொடுப்பது போன்ற விஷயங்களை தவிர்ப்பது உத்தமம்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட தொழில் ரீதியான விஷயங்கள் மீண்டும் நடைபெறும். கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம். புதன் கிழமையில் பச்சை நிற உடுத்துங்கள் நன்மைகளை பெறுவீர்கள்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கும் எனவே கூடுமானவரை எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிவுகளை எடுக்கும் பொழுது குடும்பத்தில் இருப்பவர்களை கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. பெரியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை உங்களின் நன்மதிப்பை உயர்த்தும். தேவையற்ற விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் அடையும் எனவே பயப்படத் தேவையில்லை.