இந்தச் செடியினுடைய பட்டையானது யார் வாகனத்தில் இருக்கின்றதோ, அந்த வாகனம் விபத்துக்குள்ளாக வாய்ப்பே இல்லை. ட்ராவல்ஸ் பிசினஸ் வைத்திருப்பவர்களுக்கு 1 ரூபாய் கூட நஷ்டம் வராது.

marudhani

இன்றைய காலகட்டத்தில் வாகனத்தை சாலையில், விபத்து நடக்காமல் ஓட்டிச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. நாம் சரியான முறையில் வாகனத்தை இயக்கினாலும் எதிரே வருபவர்கள், பின்னே வருபவர்கள், அக்கம் பக்கம் வருபவர்கள் என்று நமக்கு ஆபத்தை விளைவிப்பதற்காகவே, நாலுபேர் நம்மை பின் தொடர்வார்கள். இது ஒரு பக்கமிருக்க, டிராவல்ஸ் பிஸினஸ் செய்பவர்களுக்கு அடிக்கடி வண்டி வாகனங்கள் பழுதடைந்து, விபத்துக்குள்ளானால் நிச்சயம் நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

vehicle

சொந்த வண்டி வைத்து தனக்குத்தானே அந்த வண்டியை ஓட்டிக் கொண்டாலும் சரி, அதாவது செல்ஃப் டிரைவிங் செய்தாலும் சரி, அல்லது டிராவல்ஸ் பிஸ்னஸ் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வண்டி வாகனத்தின் மூலம் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்றால், ஆன்மீக ரீதியாக சுலபமான வழி ஏதாவது உண்டா என்று தேடுபவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது.

இதை பரிகாரம் என்று கூட சொல்லமுடியாது. இந்த 2 பொருள் உங்களுடைய வாகனத்தில் இருந்தால் போதும். உங்களுடைய வண்டி எதுவாக இருந்தாலும் சரி, சைக்கிளிலிருந்து பெரிய பெரிய அளவிலான புல்டோசர் வரை கூட இதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போக்கும் பொருள் மருதாணி செடியின் பட்டை சிறிய துண்டு, மிளகு 5. மருதாணி செடியின் பட்டை என்றால் மருதாணி கிளையை உடைத்து, கிழித்து எடுத்தீர்கள் என்றால் அதிலிருந்து சிறிய பட்டை கிடைக்கும். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை எப்படி அந்த செடியில் இருந்து எடுக்க வேண்டும் என்பதில் தான் சூட்சமம் அடங்கியுள்ளது. செருப்பு போட்டுக்கொண்டு மருதாணி செடியை எப்போதுமே எக்காரணத்தைக் கொண்டும் தொடக்கூடாது. மருதாணி செடியை தொட்டு வணங்கி விட்டு, உங்களுடைய நன்மைக்காகத்தான் அந்த பட்ட எடுக்கப்படுகின்றது என்று மனதார உச்சரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு ‘ஓம் அகத்தீஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தது விட்டு அதன் பின்பு ஒரு சிறிய பட்டையை உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். கிளையை மடித்து உடைத்து எடுக்கும்போதே பட்டை துண்டு உங்களுக்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு சிறிய சுருக்குப் பையில் அல்லது கவரில் உள்ளே போட்டுக் கொள்ள வேண்டும். அந்த சுருக்குப் பைக்கு உள்ளே ஐந்து மிளகுகளை வைத்து, கீழே விழாமல் ஒரு நூல் சுற்றி உங்களுடைய வாகனத்தில் வைத்துக் கொள்ளலாம்.

Milagu benefits in Tamil

உங்களுடைய வண்டி இருசக்கர வாகனமாக இருந்தால் முன்னாடி இருக்கும் பவுச்சில் இதை வைத்துக்கொள்ளலாம். நான்கு சக்கர வாகனங்கள், இல்லை டிராவல்ஸ் நடத்துபவர்களாக இருந்தால், பெரிய பெரிய லாரிகள் கனரக வாகனங்களை வைத்திருப்பவர்கள் கூட, இதை அந்த வாகனத்தில் இருக்கும் சுவாமி படத்திற்கு பின் பக்கமாக வைத்து விடுங்கள்.

vehicals

உங்களுடைய வண்டி அடிக்கடி விபத்துக்குள்ளாது. வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து நஷ்டம் ஏற்படாது. உங்களுடைய வீட்டில் உங்களுடைய பிள்ளைகளின் வண்டி வாகனத்தில் கூட, நீங்கள் இதை வைக்கலாம். யார் வண்டி ஓட்டுகிறார்களோ அவரவர் கையில்தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

marudhani

உங்களுடைய குழந்தைகளின் வண்டியில், உங்களுடைய கணவரின் வண்டியில், வீட்டில் இருக்கும் பெண்கள் இப்படி மருதாணி பட்டையையும், மிளகையும் எடுத்து ஒன்றாக போட்டு தயார் செய்து வண்டியில் வைத்தாலும் தவறொன்றுமில்லை. உங்களது உயிரைப் பாதுகாப்பதற்காக சொல்லப்பட்டுள்ள நல்ல ஒரு பரிகார முறை இது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவு நிறைவு செய்து கொள்ளலாம்.