நீங்கள் சுமங்கலிப் பெண்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது இந்த 1 பொருளையும் சேர்த்து தானம் கொடுத்தால் பலன் என்ன தெரியுமா? கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை நீங்களே செலவழித்து விடுவீர்களா?

maruthani-with-cash

தானம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் வரம் தான். மற்றவர்களுக்கு நாம் தானம் கொடுக்கும் அளவிற்கு நம்முடைய வாழ்வியல் நலமாக இருப்பதற்கு நாம் வரம் பெற்றிருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்கள் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று உற்று நோக்கிப் பாருங்கள். நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருப்போம். உலகிலேயே யார் பெரிய பணக்காரர் தெரியுமா? பணம் வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரன் கிடையாது. நோய் நொடி இன்றி, உடல் குறைபாடுகள் இன்றி, உன்னை இறைவன் படைத்திருக்கிறார் என்றால், நிச்சயம் நீ பணக்காரன் தான். அதை விட சிறந்த செல்வம் என்று உலகில் எதுவும் இல்லை. இருப்பதை வைத்து வாழ தெரிந்தவனே மனிதத் தன்மை உடையவன்.

thanam

அடுத்தவர்களின் வாழ்க்கையை பார்த்து நாம் காப்பி அடித்து வாழ்வதெல்லாம் வாழ்க்கை அல்ல. எவன் எதை வைத்து இருந்தால் நமக்கென்ன? அவன் அதை வைத்து இருக்கிறான், இவன் இதை வைத்திருக்கிறான்.. நம்மிடம் அது இல்லையே..! நம்மிடம் இது இல்லையே..! என்று எப்பொழுதும் புலம்பிக்கொண்டே இருக்கக் கூடாது. நாம் நாமாக இருப்பது, நம்மைவிட வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களை தேடிப்போய் நாம் உதவி செய்வது நம்மை இன்னும் பெரிய பணக்காரனாக ஆக்கும். அதை விடுத்து உங்களிடம் எல்லாம் இருந்தும், இல்லாத ஒன்றை தேடி அலைவதற்கு பெயர் வேறு அல்லவா!

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். நாம் நம்முடைய வீட்டில் எப்பொழுதும் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது, விரதங்கள் மேற்கொள்ளும் பொழுதோ வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ‘மங்கள பொருட்கள்’ தானம் அளிப்பது வழக்கமான ஒன்று தான். நாம் மங்கலப் பொருட்களை தானம் அளிக்கும் பொழுது நமக்கு நன்மைகள் நடைபெறும் என்பது சாஸ்திர நம்பிக்கை. மங்கலப் பொருட்களுடன் ‘மருதாணி’ தானமாக கொடுப்பது இன்னும் சிறப்பான பலன்களை தரும். மருதாணியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் உங்களுக்கு மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மருதாணியை தானம் கொடுப்பவருக்கும், அதனை வாங்குபவர்களுக்கும் யோகம் உண்டாகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

maruthani 2-compressed

அதுபோல் நம்முடைய வாழ்க்கை மென்மேலும் முன்னேறுவதற்கு நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவேனும் சேர்த்து வைத்து வர வேண்டும். மொத்தமாக செலவழித்து அந்த மாதத்திற்குள் காலி செய்து விடக் கூடாது. தினக்கூலியாக இருந்தாலும் சரி, மாத சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை மொத்தமாக நீங்களே செலவழிக்காமல், அதிலிருந்து சிறு தொகையை சேர்த்து வைத்து வாருங்கள். குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அதை ‘அன்னதானம்’ செய்யுங்கள்.

- Advertisement -

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஒருவேளை பலரின் பசியைப் போக்குவதற்கு உங்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் எண்ணற்றவை. நாம் பலன் பார்த்து தானம் செய்யப் போவதில்லை. இருந்தாலும் நாம் சம்பாதித்து உழைத்த பணத்தில் அன்னதானம் செய்வது என்பது நீங்கள் தானம் செய்த பணத்தைக் காட்டிலும் ஐந்து மடங்காக மிகப்பெரிய பலன்கள் உங்களுக்கு வந்து சேரும்.

annadhanam 1

இது முழுக்க முழுக்க உண்மையான ஒரு விஷயம் தான். அது என்ன ஐந்து மடங்கு? என்று கேட்டால் உண்மையில் நீங்கள் செய்யும் அன்னதானம் நீங்கள் உழைத்த பணமாக இருந்தால் அது மறுபடியும் உங்களிடம் 5 மடங்காக திரும்ப கிடைக்கும். இது இறைவன் வகுத்த நியதி. எவரொருவர் பிரதிபலன் எதிர்பார்க்காமல், மற்றவர்களின் நலன்கருதி தானம் செய்கின்றானோ அதுவும் தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை தானே செலவழிக்காமல் அடுத்தவரின் பசியைப் போக்க சேர்த்து வைத்து அன்னமிடும் பொழுது அந்த பணம் திரும்ப ஐந்து மடங்காகப் பெருகும் என்பது தான் நியதி. நாம் எவ்வளவோ வீண் செலவுகளை செய்கிறோம். நாம் கஷ்டப்படுவதற்கு எந்த பலனாவது கிடைத்திருக்கிறதா? நிச்சயம் இல்லை. அதுவே பிறர் நலனுக்காக நீங்கள் செய்யும் ஒரு விஷயம் நிச்சயம் பல மடங்காகப் பெருகி உங்களுக்கு புண்ணியமாக வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே
மஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா? துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம்! மகாலட்சுமி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Annathanam palangal in Tamil. Dhanam seithal. Annadhanam in Tamil. Dhanam palangal in Tamil. Annathanam palangal in Tamil.