- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமருதாணி பண வசிய மை தயார் செய்யும் முறை

மருதாணி பண வசிய மை தயார் செய்யும் முறை

- Advertisement -

ஒரு சில மனிதர்களுக்கு அதிர்ஷ்டமும் பணமும் தானாக தேடித் தேடி வந்து குவியும். சில பேர் என்ன தான் முயற்சிகளை செய்தாலும் அதிர்ஷ்டமும் இருக்காது. பண வரவும் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்து, அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கு உண்டான வழியை தேட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.

உங்களுக்கும் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டுமா. பணவரவு அதிகரிக்க வேண்டுமா. இந்த வசிய மை தயார் செய்யும் முறையை கற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் அதிர்ஷ்டசாலியாக பணக்காரர்களாக மாறலாம்.

- Advertisement -

பண வசிய மை தயார் செய்யும் முறை

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் மருதாணி இலையில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வசம்புத்தூள், சுத்தமான நெய். வசம்பு தூளை ஒரு கடாயில் போட்டு கருப்பு நிறமாக மாறும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் எல்லாம் ஊற்றக்கூடாது. வெறும் வடை சட்டியில் இந்த தூளை போட்டு வறுத்தாலே கருப்பு நிறமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதாணி இலைகளை பறித்து நன்றாக அரைத்துப் பிழிந்தால் அதிலிருந்து சாறு கிடைக்கும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி மருதாணி இலையில் இருந்து சாறு எடுக்கக் கூடாது. அந்த மருதாணி இலைகளை கசக்கி சாறு எடுக்க வேண்டும் இப்போது. கருப்பு நிறத்தில் இருக்கும் வசம்பு பொடியோடு, இந்த மருதாணி இலை சாறை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கலவையை அப்படியே ஒரு தட்டில் போட்டு நன்றாக நிழலிலேயே உலர வைத்தால் காய்ந்து விடும். காய்ந்த இந்த கலவையை, மீண்டும் நன்றாக அரைத்து சலித்து நைசான பொடியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியோடு கொஞ்சமாக பசு நெய் சேர்த்து கலந்தால் கருப்பு நிற மை கிடைத்துவிடும். இதுதான் வசிய திலகம்.

இந்த திலகத்தை கண்ணாடி கிண்ணத்திலோ பீங்கான் கிண்ணத்திலோ போட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். உங்களுடைய குலதெய்வத்தின் நாமத்தை 108 முறை சொல்லி, இதற்கு சக்தியூட்டி கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் ஒட்டுமொத்த அதிர்ஷ்டமும் பணவரவும் உண்டாகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் யார் வேண்டும் என்றாலும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் செல்லக்கூடிய காரியம், காரிய தடை இல்லாமல் இருக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும். அதற்கான பரிகாரம் தான் இது. இந்த மையை நெற்றியில் வைக்கக்கூடிய சூழ்நிலை சில பேருக்கு இருக்காது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை வீடு தேடி வர வைக்கும் விளக்கு

அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த மையை புருவத்தில் தடவிக் கொள்ளலாம். இல்லையென்றால் உச்சந் தலையில் வைக்கலாம். கழுத்துப் பகுதியில் வைக்கலாம். இது எதுவுமே முடியாது என்பவர்கள் நெஞ்சு குழியில் இந்த மையை தடவிக் கொள்ளுங்கள். ஆனால் இந்த மையை நெற்றியில் வைக்கும் போது தான் முழு பலனும் சீக்கிரமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்