மருதாணி வைத்து 10 நிமிடத்தில் கை அழகாக சிவக்க, இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்களேன்! உங்க கையை பாக்குறவங்க, மருதாணி இவ்வளவு அழகா சிவக்க என்ன ரகசியம்? அப்படின்னு கேட்பாங்க.

mehandhi

மருதாணி! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் மருதாணி இட்டுக் கொண்டால், செக்கச்செவேலென சிவக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். நிறைய பேருக்கு மருதாணியின் நிறம் கையில் ஒட்டவே ஒட்டாது. எப்படித்தான் வைத்தாலும், ஆரஞ்சு நிறத்தை தாண்டி, கையில் மருதாணி சிவக்காது. பெண்களின் கைகளுக்கு அழகு கொடுக்கும் இந்த மருதாணி இலைகள், உடல் சூட்டையும் தணிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த மருதாணி இலைகளை எப்படி அரைத்து கையில் இட்டுக் கொண்டால், பத்தே நிமிடத்தில் கை சிவக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

maruthani

இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் உங்களுக்கு எது சவுகரியமாக இருக்கின்றதோ, அதை நீங்கள் பின்பற்றி கொள்ளலாம். மருதாணி இலைகளை செடிகளிலிருந்து பறித்து வந்து, நன்றாக கழுவிவிட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இந்த மருதாணியோடு வெள்ளை சர்க்கரை – 1 ஸ்பூன், கிராம்பு – 2, எலுமிச்சை பழ சாறு – 2 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. கையில் எடுத்து இட்டுக் கொள்ளும் அளவிற்கு கெட்டிப் பதத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். ஒருவாட்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கட்டாயம் பத்து நிமிஷத்துல உங்க கை சிவக்கும் சந்தேகமே இல்லை.

இன்னும் சில பேர் மருதாணி இலையோடு கொட்டைப் பாக்கை வைத்து அரைப்பார்கள். சிறிது நேரம் தண்ணீரில் கொட்டைப் பாக்கை ஊறவைத்து விட்டு மருதாணி இலையோடு சேர்த்து அரைத்தால் மருதாணியின் வண்ணம் கையில் அடர் நிறத்தில் ஒட்டிக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

marudhani

சில பேர், எலுமிச்சை பழத்திற்குப் பதிலாக கொஞ்சம் புளியை சேர்த்து மருதாணி இலைகளோடு அரைத்து தங்களுடைய கையில் வைத்துக் கொள்வார்கள். இதுவும் நல்ல சிவப்பு வண்ணத்தை கொடுக்கும். நீங்கள் எந்த பொருளை மருதாணி இலையோடு சேர்த்து அரைத்தாலும் சரி, இறுதியாக இரண்டு அல்லது மூன்று சொட்டு நீலகிரி தைலம் என்று சொல்லப்படும் யூகலிப்டஸ் லிக்விட் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு அரை மணி நேரம், அரைத்த மருதாணி விழுதை ஊற விட்டு, அதன்பின்பு கையில் இட்டுக்கொண்டு பாருங்கள்.

- Advertisement -

மருதாணி கையில் வைத்து எடுத்த 10 நிமிடத்தில், மருதாணி ஆரஞ்சு நிறத்தில் தான் சிவந்திருக்கும். ஆனால் நேரம் போகப்போக உங்களது கையில் இருக்கும் மருதாணியின் நிறம் மெரூன் கலரில் மாறுவதை உங்களால் பார்க்க முடியும்.

mehandhi1

உங்களுக்கு மருதாணி வச்சுக்க ரொம்ப பிடிக்குமா? மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் உங்களுடைய வீட்டில் என்ன பொருட்கள் இருக்கின்றதோ, அதை வைத்து மருதாணி இலையோடு சேர்த்து அரைத்து கையில் இட்டுக் கொள்ளுங்கள். பார்ப்பதற்கு அழகு தரும் இந்த மருதாணி இலைகளை கையில் இட்டுக் கொண்டால், உடல் சூடு தணிவதுடன், நக இடுக்குகளில் இருக்கும் கிருமிகளும் இறந்துபோகும். நகசுத்தி வராமல் இருக்கும். நகங்களை அழகாக பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நம்ம வீட்டிலேயே, நம்ம கையால, சுலபமா ‘லேஸ் சிப்ஸ்’ செய்வது எப்படி? உருளைக்கிழங்கு சிப்ஸை வீட்டின் போட்டால் மட்டும் நமத்து போக காரணம் என்ன? நீங்க தெரிஞ்சுக்க ஆசை பட்றீங்களா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.