15 நிமிடத்தில் கைகளில் வைத்த மருதாணி, அடர் சிவப்பு நிறத்தில் சிவக்க, ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. மருதாணி பொடி, மருதாணி இலை இந்த இரண்டிலும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

mehandhi
- Advertisement -

பெண்கள் எல்லோருக்கும் மருதாணி வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆசை இருக்கும். அந்த மருதாணி கையில் வைத்தால் அது அடர் சிவப்பு நிறத்தில் சிவக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். நிறைய பேருக்கு இந்த மருதாணி கலர் கையில் அவ்வளவு சீக்கிரத்தில் வராது. மருதாணியை எந்த முறையில் கலந்து நம் கையில் இட்டுக்கொண்டால் 15 நிமிடத்தில் நல்ல கலர் வரும் என்ற சீக்ரெட் டிப்ஸ் பற்றிதான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tea-powder

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, 2 ஸ்பூன் டீ தூள் போட்டு, மிதமான தீயில் 5 லிருந்து 7 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த இந்த தண்ணீரை வடிகட்டியின் மூலம், வடிகட்டி திப்பியை நீக்கி விடுங்கள். இந்த தண்ணீர் மட்டும் நமக்குப் போதுமானது.

- Advertisement -

ஒரு அகலமான பௌலில் ஹென்னா பவுடர் என்று சொல்லப்படும் மருதாணி பொடியை 2 டேபிள்ஸ்பூன் அளவு போட்டு கொள்ள வேண்டும். இந்த மருதாணி பொடிக்கு 1 ஸ்பூன் சர்க்கரை தேவைப்படும். மருதாணி பொடியையும் சர்க்கரையையும் முதலில் ஒன்றாக, ஒரு ஸ்பூனை வைத்து கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு காய்ச்சி வடிகட்டி வைத்திருக்கும் டீ தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இந்த மருதாணி பொடியில் விட்டு கட்டி படாமல் மருதாணியை விழுது பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

mehandhi2

இறுதியாக நீலகிரி தைலம் என்று சொல்லப்படும் யூகலிப்டஸ் ஆயிலை 7 லிருந்து 10 சொட்டுக்கள் இந்த மருதாணி கலவையில் ஊற்றி மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து இதை அப்படியே 6 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். 6 மணி நேரம் கழித்து தான் மருதாணியை கையில் இட்டுக் கொள்ள வேண்டும். ஆறு மணி நேரம் ஊறிய இந்த மருதாணி விழுதை உங்களுடைய கையில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுத்தால் நல்ல வண்ணம் பிடிக்கும்.

- Advertisement -

ஆனால், இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் இந்த மனித அணியை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளும் பட்சத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அழகான அடர்சிவப்பு நிறம் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள். ஒரு முறை இந்த முறையில் மருதாணி இட்டுக் கொண்டால் மீண்டும் மீண்டும் இதே முறையைப் பின்பற்றித்தான் நிச்சயமாக உங்கள் கையில் மருதாணி இட்டுக் கொள்வீர்கள். அந்த அளவிற்கு மருதாணியின் கலர் கையில் பிடிக்கும்.

mehandhi1

ஒருவேளை உங்களுக்கு மருதாணி இலையைகளாக கிடைத்தால் மருதாணி இலைகளில் தண்ணீருக்கு பதிலாக இந்த டீ தூள் தண்ணீரை ஊற்றி சர்க்கரை சேர்த்து யூக்கலிப்டஸ் ஆயில் விட்டு அரைத்து, ஆறு மணி நேரம் கழித்து கையில் இட்டுக் கொள்ளலாம்.

mehandhi1

இப்படி டீத்தூள் தண்ணீரை ஊற்றி தான் மருதாணியை கலக்க வேண்டும். தண்ணீர் ஒரு சொட்டு கூட மருதாணியில் ஊற்றி கலக்க வேண்டாம். பெண்களுடைய அழகான கைகளுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கும் இந்த மருதாணிக்கு அழகு தரக்கூடியது இந்த டிப்ஸ். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -