- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்களை தீர்க்கும் மாசாணி அம்மன் வழிபாடு

கஷ்டங்களை தீர்க்கும் மாசாணி அம்மன் வழிபாடு

- Advertisement -

அம்மன் ஆலயங்கள் பல பிரசித்தி பெற்று திகழ்கின்றன. அதிலும் பெருமாளுக்கு நிகராக படுத்த கோலத்தில் காட்சி அளிக்கக்கூடிய அம்மனின் கோவிலாக திகழக்கூடியது தான் மாசாணி அம்மன் கோவில். இந்த கோவில் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருக்கிறது. இந்த அம்மனை எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மாசாணி அம்மன் வழிபாடு

ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கும். அந்த சிறப்புகளை உணர்ந்து அந்த ஆலயத்திற்கு சென்று முறையாக நாம் வழிப்பட்டோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதோடு நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் தீரும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் ஆடி மாதத்திற்குரிய அம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவிலாக திகழக்கூடியது தான் மாசாணி அம்மன் கோவில்.

- Advertisement -

இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் நாம் சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. வருடத்திற்கு ஒருமுறையாவது இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய தனி சிறப்பு என்னவென்றால் அம்மன் படுத்த ரூபத்தில் இருப்பார்கள் என்பதுதான்.

மேலும் இந்த கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக இந்த கோவிலுக்கு பின்புறமாக ஆறு ஓடும் அந்த ஆற்றில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு கை கால்களை சுத்தமாக கழுவிய பிறகு ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இந்த ஆலயத்திற்கு முன்பாக கொடி மரம் இருக்கும். அந்த கொடி மரத்தடியில் கல்லுப்பு மிளகு இவற்றை வாங்கி நம்முடைய தலையையே நாம் மூன்று முறை சுற்றிவிட்டு பிறகு அந்த கொடி மரத்தில் கொட்ட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் அந்த கனமே நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு உப்பு மிளகை போட்ட பிறகு நாம் நேரடியாக அம்மனை வழிபட சென்று விட வேண்டும். இந்த அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை என்பது மிகவும் சிறப்பு. அதே போல் புதிதாக புடவை வாங்கி சாற்றுவதும் மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது.

தங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்து அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். அந்த கோவிலில் மஞ்சளை பிரசாதமாக தருவார்கள் அந்த மஞ்சளை வீட்டிற்கு வாங்கி வந்து தினமும் நம்முடைய நெற்றியில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இந்த அம்மன் கோவிலில் கோரிக்கை சீட்டு என்று இருக்கும். இதில் நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை எழுதி அம்மனின் பாதங்களில் வைத்து வழிபடுவதன் மூலம் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற்றும் என்றும் கூறப்படுகிறது

இதையும் படிக்கலாமே: சுக்கிரனை வசியம் செய்யும் தயிர் பரிகாரம்

பல அற்புத சக்திகள் நிறைந்த இந்த மாசாணி அம்மனை முழுமனதுடன் வணங்கி சரணாகதி அடைந்தார் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் மேலும் எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகளும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்