- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்கிரனை வசியம் செய்யும் தயிர் பரிகாரம்

சுக்கிரனை வசியம் செய்யும் தயிர் பரிகாரம்

- Advertisement -

நாம் அனைவரும் அல்லும் பகலும் பார்க்காமல் ஓடி உழைத்துக் கொண்டிருப்பதற்கு காரணமாக திகழ்வது பணம்தான். இந்த பணத்தை சம்பாதிப்பதன் மூலம் நம்முடைய அடிப்படை தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்வோம். அதோடு மட்டுமல்லாமல் சுகமான வாழ்க்கை வாழவும் அதை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இவை அனைத்தையும் முறையாக நாம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தயிரை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்தால் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

தயிர் பரிகாரம்

ஆடம்பர வாழ்க்கைக்கும் அன்றாட பண வரவிருக்கும் உறுதுணையாக திகழக் கூடியவர் தான் சுக்கிர பகவான். இவருடைய அதி தேவதையாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். பொதுவாக சுக்கிர பகவானையும் மகாலட்சுமி தாயாரையும் வெள்ளிக்கிழமையில் வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. அதேசமயம் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்தோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும் சில தாந்திரீக பரிகாரங்களை நாம் செய்யும்பொழுது சுக்கிர வசியம் என்பது நமக்கு விரைவிலேயே ஏற்படும். அந்த தாந்திரீக பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். தொடர்ச்சியாக செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த பரிகாரத்திற்கு நமக்கு எச்சில் படாத தயிர் வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தயிருக்குள் நம்முடைய வலது கையில் இருக்கக்கூடிய கட்டைவிரலை வைத்து 11 முறை தயிரை சுழற்ற வேண்டும். இவ்வாறு தயிரை சுழட்டும் பொழுது நாம் ஒரு மந்திரத்தை கூற வேண்டும். “ஓம் ஜூம் சுக்ராய நமஹ”.

அதாவது இந்த மந்திரத்தை 11 முறை கூறிக் கொண்டே 11 முறை கட்டை விரலை வைத்து தயிரை சுழற்ற வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு இந்த தயிரை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சாப்பிட கொடுக்க வேண்டும். இப்படி தினமும் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருவதன் மூலம் சுக்கிர பகவானின் வசியம் என்பது ஏற்படும். இதற்கு காரணம் தயிர் என்பது சுக்கிர பகவானுக்குரிய வசிய பொருள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் வெள்ளிக்கிழமையில் தயிரை தலைக்கு, முகத்திற்கு தேய்த்து குளிப்பதன் மூலமும் சுக்கிர வசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்து வர வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் தினமும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தின் அருளை பெற ஆடி வெள்ளி வழிபாட்டு முறை

அன்றாடம் தயிரை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் இந்த முறையில் தயிரை வைத்து பரிகாரம் செய்து விட்டு சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சுக்கிர பகவானின் அருளால் பணவரவிற்கு எந்தவித குறையும் இல்லாமல் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்