இந்த பொடி போட்டு கத்தரிக்காய் வறுவல் செய்தால், யாருமே வேணான்னு சொல்ல மாட்டாங்க. வித்தியாசமாக கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி?

kathrikai-varuval
- Advertisement -

பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் கத்திரிக்காயை வைத்து, கத்தரிக்காய் வதக்கல் அல்லது கத்தரிக்காய் வறுவல் என்று சொல்லப்படும் இந்த ரெசிபியை செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கொஞ்சம், வித்தியாசமான ஒரு பொடியைப் போட்டு ஸ்பெஷலாக இந்த கத்திரிக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 1/4 கிலோ அளவு கத்திரிக்காயை நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொண்டால் பின் சொல்லக் கூடிய அளவுகள் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

kathrikai-varuval1

முதலில் மசாலா பொடி அரைத்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் 4 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையைப் போட்டு, மணக்க மணக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வேர்கடலை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதே கடாயில் சீரகம் – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 5, எள்ளு – 1/2 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 3, இந்த பொருட்களை சேர்த்து எண்ணெய் எதுவும் ஊற்றாமல் வறுத்து, இந்த பொருட்களையும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு வைத்திருக்கும் வேர்க்கடலையுடன் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

brinjal

இப்போது கத்தரிக்காய் வதக்கல் செய்ய அகலமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, கறிவேப்பிலை – 1 கொத்து போட்டு, மல்லித்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உங்கள் வீட்டில் காஷ்மீரி சில்லி இருந்தால் அது – 1/2 ஸ்பூன் சேர்த்து, நன்றாக வதக்கி விட்டு, நீளவாக்கில் வெட்டி வைத்திருக்கும் – 1/4 கிலோ அளவு கத்தரிக்காய்களை இந்த எண்ணெயில் போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு, தேவையான அளவு உப்பு தூவி, மீண்டும் ஒருமுறை வதக்கி விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டு வேக வைத்தாலே இந்த கத்தரிக்காய் வெந்து விடும். தேவைப்பட்டால் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இடையிடையே கத்திரிக்காயை திறந்து வதக்கி விடுங்கள். இல்லை என்றால் அடி பிடித்து விடும். 5 நிமிடத்திற்குள் கத்தரிக்காய்கள் வெந்துவிடும் கத்தரிக்காய்கள் நன்றாக வெந்த பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கத்திரிக்காயின் மேல் தூவி, 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான கத்திரிக்காய் வதக்கல் தயார்.

kathrikai-varuval2

பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், கிள்ளி போட்ட சாம்பார் சாதம், இவைகளுக்கு சூப்பரான சைட் டிஷ் இது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -