நினைச்ச உடனே சட்டுனு செய்யக் கூடிய ஒரு அருமையான ரெசிபி தான் மும்பை மசாலா மினி இட்லி. ரொம்பவே டேஸ்டியான இந்த இட்லி செய்ய இட்லி மாவே தேவை இல்லை தெரியும்மா?

masala mini idli
- Advertisement -

மும்பை கடை வீதிகளில் கிடைக்கும் பேமஸான ஒரு ரெசிபி தான் இந்த மசாலா இட்லி. இந்த இட்லி செய்வதற்கு இட்லி மாவு தான் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. ரொம்பவே சுலபமா அதே நேரத்தில் நினைத்த உடனே டக்குனு செய்யக் கூடிய ஒரு சூப்பரான டிஷ் தான் இந்த மும்பை மசாலா இட்லி. வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

செய்முறை

இதை செய்வதற்கு முதலில் மாவை தயார் செய்து கொள்வோம். அதற்கு ஒரு பவுலில் ஒரு கப் வறுத்த ரவை, ஒரு கப் தயிர், கால் டீஸ்பூன் உப்பு இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். அதன் பிறகு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இதை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சமையல் சோடா எதுவும் சேர்க்க வேண்டிய தேவையில்லை.

- Advertisement -

மாவை நன்றாக கரைத்த பிறகு இட்லி பாத்திரத்திரத்தை வைத்து எப்போதும் போல மினி இட்லி தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி இட்லி ஊற்றி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த இட்லிக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடான உடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் ஓமம், இரண்டும் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் லேசாக நிறம் மாறி வந்தவுடன் பூண்டு மிளகாய் விழுதை (இதற்கு நான்கு மிளகாயை கொஞ்சம் சுடுதண்ணீரில் ஊற வைத்து அத்துடன் நான்கு பல் பூண்டையும் சேர்த்து மிக்ஸியில் நல்ல பயன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்)சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு சிறிய கொடை மிளகாயை பொடியாக நறுக்கி அதில் சேர்த்த பிறகு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் பாவ்வுபாஜி (இது அனைத்து டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் கிடைக்கும்). மசாலாவை சேர்த்த பிறகு இந்த மசாலாவுக்கு தேவையான கால் ஸ்பூன் உப்பு சேர்த்து இவையெல்லாம் வேத கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடுங்கள்.

- Advertisement -

இந்த மசாலா அதிகமாக வேகக் கூடாது. பாதி அளவு வெந்தால் மட்டும் போதும். அதன் பிறகு நாம் ஏற்கனவே ஊற்றி வைத்த இட்லிகளை இந்த மசாலாவில் போட்டு பிரட்டி எடுத்து பரிமாறலாம். ரொம்பவே சுவையான மும்பை மசாலா மினி இட்லி தயார்.

இதையும் படிக்கலாமே: திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடி செய்முறை:

எப்பவும் போல ஒரே மாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா இது மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைங்க முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -