வெறும் மூணு பொருள் இருந்தா போதும் திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடியை நல்லா கம கமன்னு வாசத்தோடு ரெடி பண்ணிடலாம். இட்லி பொடியை இதை விட ஆரோக்கியமா செய்ய முடியாது.

idly podi recipe
- Advertisement -

இட்லி தோசைக்கு எல்லாம் சைடிஷா எத்தனை இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த இட்லி பொடி இருந்தா தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும். இட்லி பொடியில் பல வகை இருக்கு அதே போல அதை விதவிதமாவும் தயார் பண்ணலாம். இந்த சமையல் குறிப்பு பதிவுல ரொம்பவே சிம்பிளா அதே நேரத்துல ஆரோக்கியமா அட்டகாசமான சுவையில் திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடியை எப்படி செய்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்க போறோம்.

செய்முறை

இந்த இட்லி பொடி செய்ய முதலில் ஒரு கப் உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு கருப்பு உளுந்து சேர்த்து செய்தால் இன்னும் கூட ஆரோக்கியமாக இருக்கும். அதே போல அரை கப் கருப்பு எள்ளை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கும் வெள்ளை எள்ளை சேர்த்து கூட அரைக்கலாம். அது உங்களின் விருப்பத்தை பொறுத்து. காரத்திற்கு 10 வர மிளகாய் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இட்லி பொடி தயார் செய்து விடலாம். அதற்கு அடுப்பில் ஒரு கனமான கடாய் வைத்து சூடானவுடன் முதலில் உளுந்தை சேர்த்து சிவந்து வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் வறுக்கும் போது அடுப்பை லோ ஃபிலிமில் வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து சிவந்து வந்தவுடன் அதை ஒரு தட்டில் கொட்டி வைத்து விடுங்கள். அதே கடாயில் எள்ளை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். எள் நன்றாக பொரிந்து வந்தவுடன் அதையும் உளுந்துடன் சேர்த்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு அரை டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்த வர மிளகாய் சேர்த்து லோ ஃப்ளேமில் நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். மிளகாய் கருகி விடக் கூடாது. மிளகாய் வறுப்பட்டவுடன் அதே கடாயில் ஏற்கனவே வறுத்து வைத்து உளுந்து அனைத்தையும் சேர்த்து ஒரு முறை வறுத்தப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது மிக்ஸி ஜாரில் முதலில் காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உளுந்து எள் இரண்டையும் சேர்த்து கொஞ்சம் விட்டு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதை போட்டு ஒரே முறையாக அரைத்தால் எள்ளிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்து விடும். பொடியும் நன்றாக இருக்காது.

கடைசியாக அரைத்த பொடியை தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். திருநெல்வேலி இட்லி பொடி கம கமன்னு ரெடி.

இதையும் படிக்கலாமே: கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம் செய்முறை விளக்கம்

இந்த பொடியை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே சாப்பிடலாம். அது மட்டும் இன்றி இதில் சேர்த்து இருக்கும் உளுந்து, எள் இரண்டுமே எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு. பெண்கள் இதை தொடர்ந்து சாப்பிடும் போது நல்ல ஒரு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -