இப்படி மசாலா அரைச்சு போட்டு இதுவரைக்கும் யாருமே பூண்டு சாதம் செஞ்சிருக்கவும் மாட்டீங்க. டேஸ்ட் பண்ணி இருக்கவும் மாட்டீங்க.

poondu-sadam1
- Advertisement -

நம்மில் நிறைய பேர் வீட்டில் இந்த பூண்டு சாதம் செய்து இருப்போம். வழக்கம் போல செய்யக்கூடிய பூண்டு சாதம் போல இல்லாமல் ஒரு ஸ்பெஷல் மசாலா பொடி போட்டு செய்யக்கூடிய பூண்டு சாதம் ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். சுலபமான முறையில் பூண்டு சாதத்தை கூடுதலான சுவையோடு செய்வது எப்படி. அதுவும் வெறும் பத்தே நிமிடத்தில். அதாவது சாதத்தை வடித்து ஆற வைத்துவிட்டால் இந்த பூண்டு சாதத்தை சுலபமாக செய்து முடித்து விடலாம். லஞ்ச் பாக்ஸுக்கு கட்டிக் கொடுக்கவும் இது அருமையான ஆரோக்கியமான ரெசிபி.

வடித்த சாதம் 1 கப் அளவு, நமக்கு தேவை. ஒரு பெரிய கிண்ணத்தில் வடித்த சாதத்தை கொட்டி ஆற விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சாதம் குழைவாக வெந்திருக்கக் கூடாது. ஓரளவுக்கு உதிரி உதிரியாக சாதம் இருக்க வேண்டும். பாசுமதி அரிசி, சீரக சம்பா அரிசி, பச்சரிசி, சாப்பாட்டு அரிசி, எந்த அரிசியில் வடித்த சாதமாக இருந்தாலும் சரி இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். காலையில் வடித்த சாதத்தில் கூட, இரவு நேரத்தில் இந்த வெரைட்டி ரைஸ் செய்யலாம்.

- Advertisement -

ஒரு கைப்பிடி அளவு பூண்டை சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு தோலுடன் இடித்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.

அடுத்து பூண்டு சாதம் செய்ய மசாலா பொடி வறுத்து அரைப்போம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் தட்டிய பூண்டு பல் – 1 கைப்பிடி அளவு போட்டு வறுக்க வேண்டும். பூண்டு பாதி அளவு வறுபட்டு வந்தவுடன் வர மிளகாய் – 3, கருவேப்பிலை – 1 கொத்து, முந்திரி பருப்பு – 10, இந்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொறுமொறுப்பாகும் வரை வறுக்க வேண்டும். அதற்காக கருக விடக்கூடாது. பொன்னிறமாக வறுத்த பூண்டு நன்றாக ஆறிய பின்பு மொறுமொறுவென உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

இப்போது கடாயில் வறுபட்ட எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொறகொறப்பாக அரைத்து இந்த பொடியை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதே கடாயில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, நீளவாக்கில் வட்டிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, புதினா இலைகள் – 10, போட்டு நன்றாக வதக்க வேண்டும். பெரிய வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2 சேர்த்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு தக்காளி பழம் வேகும் வரை ஒரு மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் விட்டு விடுங்கள்.

வெங்காயம் தக்காளி அனைத்தும் நன்றாக வெந்து வந்த பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை கடாயில் கொட்டி ஒரு நிமிடம் போல நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். நமக்குத் தேவையான பூண்டு தொக்கு தயாராகிவிட்டது. இதில் சாதத்தை போட்டு நன்றாக கலக்க வேண்டும். அதாவது மசாலா அனைத்தும் வெள்ளை சாதம் படும் படி கலக்குங்கள். கலந்த இந்த சாதத்தை லேசான கடாய் சூட்டிலேயே ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து மேலே கொத்தமல்லி தழையை தூவி பரிமாறினால் அட்டகாசமான வாசனை நிறைந்த ஆரோக்கியமான பூண்டு சாதம் தயார். இந்த பூண்டு சாதத்தின் சுவைக்கு நிச்சயமாக உங்கள் வீட்டில் இருப்பவர்களின் நாக்கு அடிமையாகிவிடும். ஒரே ஒருமுறை முயற்சி செய்து தான் பாருங்களேன். ஆரோக்கியமான இந்த சாதத்தின் ருசி உங்களுக்கே தெரியும்.

- Advertisement -